35 வருடங்கள் அரபா தின உரை நிகழ்த்திய இமாம் நேற்றுடன் ஓய்வு - Sri Lanka Muslim

35 வருடங்கள் அரபா தின உரை நிகழ்த்திய இமாம் நேற்றுடன் ஓய்வு

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

-மெளலவி.எம்.ஏ.எம்.மஸ்ஊத் அஹ்மத் (ஹாஷிமி)
புனித மக்காவில் இருந்து..


அரஃபா மைதானத்தில் “அரபா பேருயை” அஷ்.ஷெய்க்.அப்துர் ரஹ்மான் சுதைசி அவர்கள் இம்முறை நிகழ்த்தினார்கள்.

சவூதி அரேபியாவின் தலைமை மார்க்க அறிஞரான ஷேக் அப்துல் அஜீஸ் அல் ஷேக் அவர்கள் கடந்த 35 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் அரஃபா மைதானத்தில் கூடும் லட்சக்கணக்கான ஹாஜிகள் மத்தியில் உரை நிகழ்த்தும் பாக்கியம் பெற்றவராக இருந்தார்.

ஒரு கண் பார்வையற்ற நிலையிலும் 35 ஆண்டுகள் இறைப்பணியில் ஈடுபட்டு வந்தார்.

அவருடைய முதுமை மற்றும் உடல் ரீதியான பாதிப்பின் காரணமாக நேற்றுடன் அவருடைய பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.

இதனால் இத்தனை ஆண்டுகள் மஸ்ஜிதுன் ஹரம் தலைமை இமாமாக இருந்த ஷேக் அப்துல் ரஹ்மான் அல் சுதைசி அவர்கள் நேற்று அரஃபா பெருவெளியில் கூடிய 30 லட்சம் ஹாஜிகள் மத்தியில் பேருரை ஆற்றினார். அதன் காட்சியை படத்தில் பார்க்கிறீர்கள்.

ஷேக் அப்துல் அஜீஸ் அல் ஷேக் அவர்கள் பணியிலிருந்து விலகும் இந்நாளில் ஹஜ் செய்யும் பொருட்டு அரஃபாவில் ஆற்றப்படும் உரையை செவிதாழ்த்தி கேட்டார். அதன் காட்சியை படத்தில் பார்க்கிறீர்கள்.

அல்லாஹ் இவர்கள் இருவர் மீதும் தனது அருள் மழையை பொழிவானாக.

அப்துல் அஜீஸ் அல் ஷேக்

அப்துல் அஜீஸ் அல் ஷேக்

 

மஸ்ஜிதுன் ஹரம் தலைமை இமாமாக இருந்த ஷேக் அப்துல் ரஹ்மான் அல் சுதைசி

மஸ்ஜிதுன் ஹரம் தலைமை இமாமாக இருந்த ஷேக் அப்துல் ரஹ்மான் அல் சுதைசி

Web Design by Srilanka Muslims Web Team