35 வருடங்கள் அரபா மைதானத்தில் உரை நிகழ்திய முப்தியின் உரை இம்முறை இல்லை - Sri Lanka Muslim

35 வருடங்கள் அரபா மைதானத்தில் உரை நிகழ்திய முப்தியின் உரை இம்முறை இல்லை

Contributors
author image

Editorial Team

சௌதி அரேபியாவின் முன்னிலை மதகுரு, 35 ஆண்டுகளில் முதல்முறையாக, இந்த ஆண்டு பாரம்பரிய ஹஜ் போதனை வழங்கப் போவதில்லை என்று அறிக்கைகள் தெரிவிகின்றன.

இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை அன்று வருகின்ற முஸ்லிம்களின் உச்சகட்ட புனிதப் பயணத்தை அடையாளப்படுத்துகின்ற போதனையானது தலைமை முப்தீயான அப்துல் அசிஸ் அல் ஷேக்கால் வழங்கப்படவுள்ளது.

உடல்நல குறைபாடு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சௌதி செய்தித்தாள் தெரிவித்திருக்கிறது.

 

ஷேக் அல் ஷேக் தலைமை முப்தியாக 1999 – ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். ஆனால், நாமிரா மசூதியிலிருந்து, அராஃபத் மலை வரை 1981- ஆம் ஆண்டிலிருந்து அவர் போதனை வழங்கி வந்ததாக சௌதி செய்தித்தாளான ஒகாஸ் கூறுகிறது.

அவருக்கு பதிலாக ஷேக் சாலே பின் ஹமிட் இந்த போதனையை வழங்குவார் என்று அல்-ரியாத் செய்தித்தாள் தெரிவிக்கிறது. ஆனால், அது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை. (bbc)

 

Web Design by Srilanka Muslims Web Team