5 மாதங்களில் 44 நாடுகளுக்கு பறந்த பீரிஸ் : 150 மில்லியன் ரூபா செலவு - ரவி கருணாநாயக்க - Sri Lanka Muslim

5 மாதங்களில் 44 நாடுகளுக்கு பறந்த பீரிஸ் : 150 மில்லியன் ரூபா செலவு – ரவி கருணாநாயக்க

Contributors

வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், கடந்த 5 மாதங்களில் 44 நாடுகளுக்குப் பயணம் செய்து 150 மில்லியன் ரூபாவை விரயம் செய்துள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர், ரவி கருணாநாயக்க கூறுகையில், கடந்த 15ம் நாள் தொடக்கம் 17ம் நாள் வரை கொழும்பில் நடைபெற்ற கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் படி அழைப்பு விடுக்க, கடந்த 5 மாதங்களில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் 44 நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

கொமன்வெல்த் அமைப்பிலுள்ள 54 நாடுகளில் 44 நாடுகளுக்கு பீரிஸ் சென்று அழைப்பு விடுத்தார்.இதற்கு 150 மில்லியன் ரூபா விரயமான போதிலும், 21 நாடுகளின் தலைவர்களே கொழும்பு வந்தனர்.

இந்தப் பயணங்களுக்கான விமான செலவு, தங்குமிட கட்டணங்கள், மற்றும் பிற தேவைகளுக்காக 150 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது அபத்தமானது.33 நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டுக்கு வரவில்லை.

அருகில் உள்ள இந்தியா, மாலைதீவு மற்றும் அடுத்த மாநாட்டை நடத்தவிருந்த மொறிசியஸ் போன்ற நாடுகளைக் கூட எமது பக்கத்துக்கு கொண்டு வரமுடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 5 மாதங்களில் பீரிஸ், 44 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டது மற்றும் அதற்காக 150 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது பற்றி சிறிலங்கா வெளிவிவகார செயலர் கருணாதிலக அமுனுகம, கருத்து எதையும் கூறவில்லை.

ஒரே ஒரு நாட்டுக்கு மட்டுமே பீரிஸ் நேரில் அழைப்பு விடுத்தாகவும், ஏனைய நாடுகளுக்கு அந்தந்த நாடுகளுக்கான சிறிலங்கா தூதரகங்களின் ஊடாகவே அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தியப் பிரதமருக்கு மட்டும் சிறிலங்கா அதிபரின் அழைப்பை ஜி.எல்.பிரிஸ் கையளித்திருந்தார்.எனினும் மன்மோகன்சிங் அதை ஏற்றுக் கொண்டு கொழும்பு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.tc

Web Design by Srilanka Muslims Web Team