5 லீற்றர் பெற்றோல் பெற 5 போத்தல் மதுபானம் லஞ்சமாக பெற்ற இளைஞர்கள்..! - Sri Lanka Muslim

5 லீற்றர் பெற்றோல் பெற 5 போத்தல் மதுபானம் லஞ்சமாக பெற்ற இளைஞர்கள்..!

Contributors
author image

Editorial Team

எரிபொருள் நெருக்கடியால் நாடே அவதிப்பட்டு வரும் நிலையில், எரிபொருளை பதுக்கியவர்கள் சட்டவிரோதமாக அதிகவிலைக்கு விற்றுவரும் நிலையில், வர்த்தகர் ஒருவருக்கு 5 லீற்றர் பெற்றோல் பெற்று கொடுக்க அவரிடமிருந்து 5 போத்தல் மதுபானம் பெற்றுக்கொண்ட சம்பவம் இரத்தினபுரி, இறக்குவானையில் பதிவாகியுள்ளது.

இறக்குவானை நகருக்கு சென்றிருந்த நபர் ஒருவர் தனது காருக்கு பெற்றோல் பெற்றுக்கொள்ள எங்கும் திரிந்தும் அவரால் பெற்றோலை பெற்றுக்கொள்ள முடியவில்லை.

இந்நிலையில் ​​சில இளைஞர்களைச் சந்தித்த வர்த்தகர் அவர்களிடம் எங்கே பெற்றோல் எடுக்கலாம் என விசாரித்தபோது அந்த இளைஞர்கள் தமக்கு மதுபானம் வாங்கி தந்தால் பெற்றோல் வாங்க உதவலாம் என கூறியுள்ளனர்.

இதற்கு குறித்த வர்த்தகரும் இரவு வெகுநேரமாகிவிட்டதால் பெற்றோலை பெற்றுக்கொள்ள மதுபானக்கடை ஒன்றிற்குச் சென்று ஐந்து மதுபான போத்தல்களை வாங்கி இளைஞர்களிடம் கொடுத்துள்ளார்.

இதையடுத்து வர்த்தகரை கூட்டி சென்று இளைஞர் சட்டவிரோதமாக எரிபொருள் விற்பனை செய்யும் நபரை சந்தித்து ஐந்து லீற்றர் பெற்றோலை வாங்கி கொடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

Web Design by Srilanka Muslims Web Team