610 கிலோ நிறையுடைய காலிதின் உடம்பு 320 கிலோவாக குறைப்பு -மன்னர் அப்துல்லா உதவி - Sri Lanka Muslim

610 கிலோ நிறையுடைய காலிதின் உடம்பு 320 கிலோவாக குறைப்பு -மன்னர் அப்துல்லா உதவி

Contributors

qout227

 

-ரியாத்-

சவுதி அரேபியாவில் ஜஷான் பகுதியை சேர்ந்தவர் காலித் மொக்சன் அல்-ஷயோரி (30). இவர் 610 கிலோ உடல் எடை இருந்தார். இதனால் தனது வாழ்வில் மிக அவதிப்பட்டு வந்தார்.

 

 

 

இதை அறிந்த சவுதி அரேபிய மன்னர் அப்துல்லா இவரது உடல் எடையை குறைக்க உத்தரவிட்டார். அதற்கான செலவை அரசு ஏற்பதாகவும் அறிவித்தார். இதையடுத்து அவர் ரியாத்தில் உள்ள மன்னர் பகத் மெடிக்கல் சிட்டி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

 

 

 

அங்கு அவருக்கு டாக்டர்கள் குழு விசேஷமாக சிறப்பு சிகிச்சை அளித்தனர். அதிநவீன மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. அதனால் 4 மாதத்தில் அவர் 290 கிலோ உடல் எடை குறைந்தார்.

 

 

தற்போது அவரது உடல் எடை 320 கிலோ ஆக உள்ளது. அதிநவீனமான லேப்பிராஸ்கோபி முறையில் அறுவை சிகிச்சை செய்து உடல் எடையை குறைத்ததாக ஆஸ்பத்திரி டாக்டர் அயத் அல்–குவாத்தான் தெரிவித்தார்.

 

 

 

மேலும் அவருக்கு அமெரிக்காவில் இருந்து சிறப்பு வகையான உணவுகள் வரவழைக்கப்பட்டு வழங்கப்படுகிறது. அவர் உட்காருவதற்கு ராட்சத பலமான இரும்பு நாற்காலி தயாரிக்கப்பட்டுள்ளது.

 

 

இதற்கு முன்பு அவருக்கு படுத்து தூங்க 3 படுக்கைகளை பயன்படுத்தி வந்தார். உடல் எடை குறைத்த பிறகு தற்போது அவர் ஒரு படுக்கையை மட்டுமே பயன்படுத்துகிறார் என்றும் அவர் கூறினார்.

Web Design by Srilanka Muslims Web Team