70 லட்சம் பெறுமதியான போலி நாணயத்தாள்கள் மீட்பு: P67799159 என்ற இலக்கத்தை கண்டால் உடன் அறிவிக்கவும்! - Sri Lanka Muslim

70 லட்சம் பெறுமதியான போலி நாணயத்தாள்கள் மீட்பு: P67799159 என்ற இலக்கத்தை கண்டால் உடன் அறிவிக்கவும்!

Contributors

மாலபே பிரதேசத்தில் ஒருதொகை 2000 ரூபா போலி நாணயத் தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குற்ற விசாரணைத் திணைக்களத்தின் விஷேட பொலிஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன் பெறுமதி சுமார் ஏழு மில்லியன் (70 லட்சம்) என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இவற்றின் தொடர் இலக்கம் P67799159 எனவும் தெரியவந்துள்ளது.

இவ்வாறு போலி 2000 ரூபா நாணயத்தாள்கள் பல அச்சிட்டு புலக்கத்தில் விடப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.

எனவே P67799159 என்ற தொடரிலக்கத்தையுடைய 2000 ரூபா நாணயத் தாளாயின் அது போலி நாணயத்தாளாக இருக்கக்கூடும் எனவும், அதை உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறும் மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team