8 ஆண்டுகளுக்கு மேல் வெளிநாட்டு பணியாளர்கள் வசிக்க முடியாது: சவூதி அதிரடி சட்டம்! - Sri Lanka Muslim

8 ஆண்டுகளுக்கு மேல் வெளிநாட்டு பணியாளர்கள் வசிக்க முடியாது: சவூதி அதிரடி சட்டம்!

Contributors

 

 

வெளிநாட்டு பணியாளர்கள் விஷயத்தில் ‘நிதாகத்’ சட்டத்தை தொடர்ந்து,  அதிரடி திட்டங்களை கொண்டு வர, சவூதி அரசு திட்டமிட்டுள்ளது.

(06/01/14) ‘அரப் நியுஸ்’ நாளிதழில் வந்துள்ள செய்தியாவது :

வெளிநாட்டு பணியாளர்கள் குறித்து வரைவு திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது, அதன்படி 8 ஆண்டுகளுக்கு மேல் எந்த வெளிநாட்டினரும் தங்கள் நாட்டில் பணிபுரியமுடியாது.

இந்த திட்டத்துக்கு சவூதி தொழிலதிபர்கள் பலரும் கடும் எதிர்ப்புக்களை தெரிவித்து வருவதாகவும் மேலும் கூறுகிறது, அரப் நியூஸ்.

சவூதி அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சில பட்டப்படிப்பை முடித்துள்ளவர்களுக்கு இதிலிருந்து விலக்கப்பட்டுள்ளது.

இச்சட்டம் இன்னும் அமுலுக்கு வரவில்லை என்றாலும், பல்வேறு விஷயங்களை விரிவாக வரையறுத்து தயாரிக்கப்பட்டுள்ளது இந்த வரைவு சட்டம்.

மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் குடும்பத்துடன் சவூதியில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள், இனி 2 ஊழியர் என கணக்கிடப்படுவர்.

இது தவிர உயிர் கொல்லி புள்ளிகள் சிலவற்றையும் வரையறுக்கிறது இச்சட்டம்.

6000 ரியாலுக்கு மேல் மாத சம்பளம் பெறுபவர் 1.5 புள்ளிகள் என்ற வகையிலும், 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஊழியர்கள் 2 புள்ளிகள் பெற்றவராகவும் கருதப்படுவார்கள், எனவும் சொல்லுகிறது இந்த வரைவு சட்டம்.

பாலஸ்தீனியர் உள்ளிட்ட நாடு துறந்த அகதிகளுக்கு இச்சட்டம் பொருந்தாது, எனவும் கூறப்பட்டுள்ளது.

 

Web Design by Srilanka Muslims Web Team