9 நாட்களில் 45 உடல்கள் அடக்கம்! - Sri Lanka Muslim
Contributors

கடந்த 09 தினங்களில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த 45 பேரது உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

இவர்களில் தொற்றினால் பலியான கத்தோலிக்கப் பெண் ஒருவரும் அடங்குகின்றார் என்று சுகாதார அமைச்சின் கோவிட் ஒழிப்பு பற்றிய தொழில்நுட்பக் குழுவின் பணிப்பாளரான டாக்டர் அன்வர் அம்தானி தெரிவித்தார்.

மட்டக்களப்பு – ஓட்டமாவடி பிரதேசத்திலுள்ள ஆள்நடமாட்டம் அற்ற பகுதியில் கோவிட் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இதுவரை 45 பேரது உடல்கள் கடந்த 09 நாட்களில் அங்கு அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றன.

இதேவேளை நேற்று ஞாயிற்றுக்கிழமை அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்கள் 307 பேரில் 25 பேர் வெளிநாடுகளிலிருந்து வருகைத்தந்தவர்கள் என்றும், ஏனையவர்களில் பலர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Web Design by Srilanka Muslims Web Team