மக்காவுக்கு இம்முறை உலக நாடுகளிலிருந்து 15 இலட்சம் பேர் வருகை - Sri Lanka Muslim

மக்காவுக்கு இம்முறை உலக நாடுகளிலிருந்து 15 இலட்சம் பேர் வருகை

Contributors

(மக்காவிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா )

புனித ஹஜ் கடமையினை நிறைவேற்றும் பொருட்டு  மக்காவுக்கு இம்முறை உலக நாடுகளிலிருந்து 15 இலட்சம் பேர் வருகைத்தந்துள்ளதாக சவூதி அரேபியாவின் ஹஜ் விவகாரங்களுக்குபொறுப்பான தகவல் மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

மக்கா நகரின் விஸ்தரிப்பு மற்றும் புனரமைப்பு பணிகள் இடம் பெறுவதால் சவூதி அரேபியாவின் மக்கா நகருக்குள் குறிப்பிடப்பட்ட தொகையினர் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சு தெரிவிததுள்ளதுடன்,ஏற்கனவே ஹஜ் கடமைகளை நிறைவு செய்து கொண்டவர்கள் இம்முறை வருவதை கட்டுப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே வேளை மக்கா நகரில் ஒன்று கூடியுள்ள ஹஜ்ஜாஜிகளின் நலன் குறித்தும்,அவர்களது பாதுகாப்பு தொடர்பிலும் 95000 பொலீஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.அதே வேளை ஹாஜிகளின் விசேட கண்காணிப்பு தொடர்பில் விமானங்கள் மக்கா நகரை நேட்டமிட்டவாரு பயணிப்பதையும் காணமுடிகின்றது.

பல நாடுகளை சேர்ந்த முஸ்லிம்கள் மக்காவுக்குள் வருகைத்தந்துள்ளதால் புனித கஹ்பதுல்லா அமைந்துள்ள பிரதேசத்தில் விசேட கண்காணிப்பு கெமராக்கல் பொருத்தப்பட்டுள்ளன.நாளை திங்கட்கிழமை அரபா தினமாகியதால் ஹாஜிகள்  அரபாவில் ஒன்று கூடி தமது மதக் கடமையில் ஈடுபடவுள்ளனர்.அரபா தினம் ஹஜ் கடமையினை பிரதானமானதாகும்.

அதேவேளை சவூதி நாட்டு மன்னரின் அழைப்பின் பேரில் 16 நாடுகளைச் சேர்ந்த 1400 பேர் இந்த ஹஜ் கடமையினை நிறைவேற்ற வருகைத்தந்துள்ளதுடன்,இலங்கையிலிருந்து 50 பேர்கள் இம்முறை மன்னரின் பிரதி நிதிகளாக வருகைத்தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதே வேளை இவ்வாறு வருகைத்தந்துள்ள ஹாஜிகளின் நலன் தொடர்பில் ஹஜ் மற்றும் மத விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சின் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வழிகாட்டல்களை வழங்கிவருவதாக இக்குழுவில் இடம் பெற்றுள்ள இலங்கையினை சேர்ந்த றியாத் அல்-இமாம் பல்கலைக்கழக உயர் கல்வி கற்கை பிரிவின் மாணவர் அபால்தீன் முஹம்மத் இல்ஹாம் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team