காஸாவில் சிக்கியிருந்த இலங்கையர் நால்வர் நாடு திரும்பினர்!

காசாவில் சிக்கித் தவித்த 4 பேர் கொண்ட இலங்கைக் குடும்பம் 24ஆம் திகதி இலங்கையை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளிவிவகார அமைச்சின் தூதரக  பிரிவு குடும்பத்தைத் திருப்பி வரவழைப்பதற்கு நடவடிக்கை எடுத்தது.

அவர்கள் கொழும்பு வந்தவுடன், வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் அவர்களை வரவேற்றனர்.

கெய்ரோவில் உள்ள இலங்கை தூதரகத்தின் அதிகாரிகள், எகிப்திய அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, எகிப்துக்கும் காசாவுக்கும் இடையிலான ரஃபா எல்லைக்கு சென்று சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை மீட்டனர்.

புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பின் (IOM) உதவியுடன் இவர்களுக்கான விமான சேவை ஏற்பாடுகளை வெளியுறவு அமைச்சகம் முன்னெடுத்திருந்தது.

2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி ஏற்பட்ட நெருக்கடியின் தொடக்கத்திலிருந்து கெய்ரோ மற்றும் ரமல்லாவில் உள்ள இலங்கை தூதரகங்களின் ஒருங்கிணைப்பில் காசா பகுதியிலிருந்து மொத்தம் 15 இலங்கையர்கள் ரஃபா எல்லை வழியாக மீட்கப்பட்டு பாதுகாப்பாக இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். 

Previous post “மரணித்தவரின் ஐந்து சொத்துரிமைகள் ஓரு விளக்கம் “நூல் காத்தான்குடியில் வெளியீடு!
Next post நீர்கொழும்பில் முப்பெரும் விழா!