’’ரணிலை பாம்பு எனக் கூறவில்லை” – நாமல் பல்டி!

”ரணில் ஒரு பாம்பு,அந்த பாம்பு எப்போது தீண்டும்  என்று  குறிப்பிட முடியாது’  என நான் எங்கும் யாரிடமும் கூறவில்லை என முன்னாள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சரும்  பொதுஜன பெரமுன  எம்.பி.யுமான நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  திங்கட்கிழமை (27) விசேட கூற்றை முன்வத்த விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க ,நாமல் ராஜபக்‌ஷ   சரித் என்பவரை சினமன் கிரேன்ட் ஹோட்டலில் சந்தித்துள்ளார்.’ரொஷான் அண்ணாவை கவனமாக இருக்க சொல்லுங்கள்.ரணில் ஒரு பாம்பு,அந்த பாம்பு எப்போது தீண்டும்  என்று  குறிப்பிட முடியாது’ என்று குறிப்பிட்டுள்ளார்.பாம்பு தவறான இடத்தில் படமெடுத்தால் அடிபட நேரிடும். ஊழல்வாதிகளை அடையாளப்படுத்திய என்னையா? தீண்ட வேண்டும்?எனக்கேட்டார்.

இதன்போதே  எழுந்த முன்னாள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சரும்  பொதுஜன பெரமுன  எம்.பி.யுமான நாமல் ராஜபக்‌ஷ ,”ரணில் ஒரு பாம்பு,அந்த பாம்பு எப்போது தீண்டும்  என்று  குறிப்பிட முடியாது’  என நான் எங்கும் யாரிடமும் கூறவில்லை.பாராளுமன்ற சிறப்புரிமையில் இருந்து கொண்டு பொய்யுரைக்க  கூடாது.ரொஷான் ரணசிங்கவுக்கு ஏதேனும் குறிப்பிட வேண்டுமானால் நான் அவரிடம்  நேரடியாக கூறுவேன்.மூன்றாம் தரப்பினர் ஊடாக தகவல் அனுப்ப வேண்டிய தேவை எனக்கு இல்லை.ஆகவே இந்த கருத்தை நீக்கிக் கொள்ளுங்கள் என்றார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ரொஷான் ரணசிங்க ‘சரித் என்னிடம் பொய்யுரைத்திருந்தால் அதனை நீக்கிக் கொள்வேன். பொறுப்புடனா குறிப்பிடுகின்றீர்கள் என்று கேட்டேன்.அதற்கு ஆம் என்றார்.சரித் உங்களின் நண்பர்.நீங்கள் தான் அவரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தீர்கள்.நீங்கள்   கடந்த வாரம்  பாராளுமன்றத்தில் என்னை சந்தித்த போது ‘ரொஷான் அண்ணா,கவனமாக செயற்படுங்கள்.உங்களை பழிவாங்கும் முயற்சி முன்னெடுக்கப்படுகிறது என்று கூறினீர்கள்தானே   ‘ என்றார். இதன்பின்னர் நாமல் ராஜபக்‌ஷ எம்.பி. எதுவும் கூறவில்லை.

Previous post நீர்கொழும்பில் முப்பெரும் விழா!
Next post மன்னார் தீவு மாயமாகும் அபாயம்!