பம்பலப்பிட்டிய முஸ்லிம் மகளிர் கல்லூரியில் நெருக்கடியான நிலை!

கொழும்பு மாவட்டத்தில் வாழும் முஸ்லிம் மகளிர்களுக்கு மட்டுமல்ல முழு இலங்கை வாழ் முஸ்லிம்கள் சமூகத்தின் மகளிர்களது கல்விக் கண்ணாக  உள்ள ஓர் அரச, தேசிய பாடசாலையாக பம்பலப்பிட்டியில் உள்ள முஸ்லிம் மகளிர் கல்லுாாி மட்டுமே உள்ளது.

இக் கல்லுாாியின் அதிபர் நஸ்மியா முனாஸ் தலைமையில், கல்லுாாியின் நலன் விரும்பிகள் அடங்கிய கூட்டமொன்று கல்லுாரியின் ஹாஜரா  மண்டபத்தில் நடைபெற்றது. இக்  கல்லுாாியின் பழைய மாணவிகள் சங்கத்தின், உப தலைவி பெரோசா முசம்மில் மற்றும் பழைய மாணவிகள நிர்வாக உறுப்பினர்கள்,  பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும், நலன் விரும்பிகள், கல்லுாாியின் சில பெற்றோர்களும் சமூகமளித்திருந்தனர்.

இக் கல்லுாாியின்  அதிபர் இங்கு உரையாற்றுகையில், 

இக் கல்லுாாியில் தற்பொழுது 3500 க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்விகற்கின்றனர். இக் கல்லுாாியை காலம் சென்ற   சேர் ராசிக் பரீட் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்டு 77 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளது. ஆனால் இக் கல்லுாரியின் உள்ள பௌதீக வளங்கள்,வகுப்பறைக்  கட்டிங்கள், விடுதி , கூட்ட மண்டபம் , மாணவர்களுக்கான விளையாட்டு பயிற்சி, ஆய்வு கூடங்கள் போன்ற  போதிய வசதி இன்மையால் மாணவிகள் பெரிதும் கஸ்டங்களை எதிர்நோக்குகி்ன்றனர்…..கடந்த .65  வருடங்களுக்கு முன் நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டிடங்களே  இங்கு காட்சியளிக்கின்றன.  இடைவேளையில் மாணவர்கள் நடமாடக் கூடிய வசதிகள் இல்லை….. 

உயர்தர மாணவிகளுக்காக  மெலிபன் காமன்ஸ் நிறுவனத் தலைவர்  இல்யாஸ் ஹாஜி நிர்மாணித்த கட்டிடம் எமது உயர் தரம் கற்கும் மாணவிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக உள்ளது. 

பிரதான கட்டடிங்கள் உள்ள 60 பேர்ச் காணியில் உள்ள கட்டிடங்கள் பழமை வாய்ந்தது இங்கு மாணவிகள் கூடி நின்று நடமாடுவதற்கு ஒர் சிறிய கானியே முன்றலில் உள்ளது. தற்பொழுது உள்ள கூட்ட மண்டபம் 300 மாணவிகளை மட்டுமே உள்ளடக்க முடியும். .மிகுதி 3000 மாணவிகளை உள்ளடக்க முடியாமல் உள்ளது…..

அத்துடன் இக் கட்டிடத்திற்குள் மாணவிகள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் சம்பந்தமாக ஏதாவது கூட்டங்கள் நடத்துவதற்கு இதற்குள் தங்கி இருக்கக் கூடிய வசதிகள் …இல்லை அதிக உஸ்னமாகவும்  உள்ளது.

ஒவ்வொரு வருடமும் கொழும்பில் வாழும் பெற்றோர்கள் தமகு பென் பிள்ளைகளுக்கு   முதலாம் ஆண்டுக்கு  அனுமதி கோரி  750-800 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறுகின்றனர்  ஆனால்  இக் கல்லுாரியில்  250 மாணவிகளுக்கு  மட்டுமே அனுமதி வளங்கமுடிகின்றது. ஆகவேதான் இக் கல்லுாாியின் கட்டிடங்களை  முற்று முழுதாக நீக்கி ஓர் சிறந்த நவீன முறையில்  பல்தேவைக்  கட்டிடங்கள் (proposed Multi Purpose Building  Complex for Muslim Ladies College Colombo 4 ) கொண்ட வரைபடத்தினை சிறந்த  கட்டிக்கலைஞர்களினால் வரையப்பட்டுள்ளது.

இதற்கான   திட்டமொன்றையும் வகுத்துள்ளோம். இதனை நிர்மாணிக்க  1000 மில்லியன் ருபாய் தேவைப்படும். என கணக்கிடப்பட்டுள்ளது…. இதில் அரைவாசியை சேர்த்தெடுத்தால் மட்டுமே கல்வியமைச்சு இக் கட்டிடங்களை மீள நிர்மாணிக்க அனுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளது……. புதிய கட்டிடம் நிர்மாணிக்கும் வரை இங்குள்ள வகுப்புக்களை உயர் தரத்திற்கென நிர்மாணிக்கப்பட்ட கட்டிடத்தில் நாங்கள் குடிபெயரமுடியும்.

. ஆகவே தான் ”கல்விக்கு உதபி செய்பவர்கள் என்றும் மரணிப்பதில்லை…..என்ற அருல் வாக்கியத்த்திற்கமைவாக  .

இத்திட்டத்தினை அமுல்படுத்த உள்நாட்டிலும்  வெளிநாட்டில் வாழும் நலன் விரும்பிகள் , முஸ்லிம் சமூகத்தில் இருக்கும் நலன் விரும்பிகள், நன்கொடையாளர்கள், கல்வியலாளர்கள், வெளிநாட்டுத் துாதுவர்கள் தொடா்புள்ளவர்கள் அல்லது   தங்களுக்கு தெரிந்த கல்விக்கு உதவுவர்களை அனுகி இவ் நற்காரியத்திற்கு உதவுமாறு இப் பாடாசலையின் கல்விச் சமூகம் சார்பாக அதிபர் நஸ்மியா முனாஸ் வேண்டிக் கொண்டார்.

அஷ்ரப் ஏ சமத்
Previous post பிரபாகரனின் மகள் எனப்படுபவர் குறித்த கேள்விக்கு பந்துல பதில்!
Next post ‘திருடனை வெளிப்படுத்தியவர் உதைத்து வெளியேற்றி, ஊழல் செய்த குழு பாதுகாக்கப்பட்டுள்ளது’ – சஜித்!