ரயிலுடன் மோதிய சுற்றுலா பஸ்!

இன்று அதிகாலை வஸ்கடுவ பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்கும் போது சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பேரூந்தொன்று புகையிரதத்துடன் மோதியதில் இருவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேரூந்தே விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அளுத்கமவில் இருந்து சிலாபத்தை நோக்கி பயணித்த பவர் செட் புகையிரதமே இவ்விபத்திற்கு முகங்கொடுத்துள்ளது.

Previous post முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு!
Next post கர்ப்பிணி தாய்மாருக்கு வழங்கப்படும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு!