கர்ப்பிணி தாய்மாருக்கு வழங்கப்படும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு சுகாதார வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்களினால் வழங்கப்படும் கல்சியம் மற்றும் விட்டமின் மாத்திரைகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக தாய்மார்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

பல மாதங்களாக கல்சியம் மற்றும் விட்டமின் மாத்திரைகள் வழங்கப்படவில்லை. இதனால், குறித்த மருந்துகளை வெளியில் இருந்து வாங்க வேண்டியுள்ளதாக தாய்மார்கள் தெரிவிக்கின்றனர்.

இதுதவிர கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்க வழங்கப்படும் HPV தடுப்பூசியும் ஒரு வருடமாக கிடைக்கவில்லை என்றும் குறிப்பிடுகின்றனர்.

Previous post ரயிலுடன் மோதிய சுற்றுலா பஸ்!
Next post பாலியல் துஷ்பிரயோக வழக்கில் கைதானவர் சிறையில் தூக்கிட்டு தற்கொலை!