பாலியல் துஷ்பிரயோக வழக்கில் கைதானவர் சிறையில் தூக்கிட்டு தற்கொலை!

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக அத்துரிகிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் ஹோமாகம, பனாகொட, ரொமியல் மாவத்தைச் சேர்ந்த 54 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோமாகம, பனாகொட மாதெனியவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதியொருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் அத்துரிகிரிய பொலிஸின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினால் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் அறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Previous post கர்ப்பிணி தாய்மாருக்கு வழங்கப்படும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு!
Next post “என்னை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கியமையே கோட்டாவின் அழிவுக்கான ஆரம்ப புள்ளி” – விமல்!