மஸ்கெலியாவில் உயிரிழந்த சிறுத்தை மீட்பு!

மஸ்கெலியா, பிரவுன்ஸ்விக் தேயிலை தோட்டப்பகுதியில் இன்று (29) காலை சிறுத்தையொன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த சிறுத்தையானது சுமார் 04 அடி உயரமும் 06 அடி நீளமும் கொண்டது எனவும் முயலுக்காக வைக்கப்பட்ட பொறியின் கம்பியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாகவ தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous post இலங்கை வந்தைடைந்தார் ஜெரோம் பெர்னாண்டோ!
Next post யாழ். போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வருவோருக்கு இலவச தங்குமிட வசதி!