பங்களாதேஷ் தேர்தலில் ஷகிப் அல் ஹசன் வரலாற்று வெற்றி!

பங்களாதேசில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், அந்நாட்டின் கிரிக்கெட் அணி முன்னாள் தலைவர் ஷகிப் அல் ஹசன் வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளார்.

இந்த பொதுத் தேர்தலை பங்களாதேஷ் எதிர்க்கட்சிகள் புறக்கணித்திருந்த நிலையில், நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. நேற்று மாலையுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியிருந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

பங்களாதேஷ் பிரதமரும் அவாமி லீக் கட்சித் தலைவருமான ஷேக் ஹசீனா 2,49,965 வாக்குகளில் வெற்றி பெற்றாா். கடந்த 1986 ஆம் ஆண்டிலிருந்து அத்தொகுதியில் போட்டியிட்டு வரும் ஹசீனா, 8 ஆவது முறையாகவும் வெற்றி பெற்றுள்ளதாக பங்களாதேஷ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

ஆளும் அவமி லீக் கட்சி சார்பில் மகுரா மேற்கு தொகுதியில் போட்டியிட்ட பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஷகிப் அல் ஷசன் 1.50 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வெற்றியை தொடர்ந்து, வங்கதேச பாராளுமன்ற உறுப்பினராக முதல்முறையாக ஷகிப் அல் ஹசன் பொறுப்பேற்கவுள்ளார்.

Previous post ‘பிற நாடுகளின் கொந்தராத்துக்களுக்காக, பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் கொண்டுவரப்பட்டால் ஆதரிக்கமாட்டோம் – ரிஷாட்!
Next post காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கிவைப்பு!