பாஜக அரசியலில் சிக்காமல் தப்பித்து வரும் டோனி!

அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவுக்கு நாடு முழுவதும் இருந்து சுமார் எட்டு ஆயிரம் சிறப்பு மற்றும் முக்கிய விருந்தினர்கள் பங்கேற்பதற்காக ராமர் கோவில் அறக்கட்டளை சார்பாக அழைப்பிதழ்கள் நேரடியாக வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள அரசியல் , சினிமா விளையாட்டு பிரபலங்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

இருப்பினும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரான எம்.எஸ். டோனி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில், டோனி ஏன் கலந்து கொள்ளவில்லை என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.அதாவது எம்.எஸ். டோனி சாதி, மதம்,அரசியல் சார்ந்த நிகழ்வுகளில் கலந்து கொள்வதில் விருப்பம் காட்டுவது இல்லை என்பதால், இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

சர்வ வல்லமை உடைய இந்தியாவின் பாஜகவுக்கு பயந்து பல பிரபலங்களும் அவர்கள் சொல்லும் விடயங்களை டிவிட்டாக போடுவது வழக்கம். ஆனால் இந்திய கிரிக்கெட் அணியின் ஒப்பற்ற தலைவனாக விளங்கிய டோனி மட்டும் பாஜக அரசியலில் சிக்காமல் தப்பித்து வருகிறார். ஜார்க்கண்ட் அரசியல் தேர்தலில் பாஜக தோனியை வைத்து காய் நகர்த்த முயன்றதாகவும் அது தோனிக்கு பிடிக்கவில்லை என்பதால் பல சிக்கல்கள் டோனிக்கு உண்டாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால்தான் டோனி பாஜகவின் எந்த ஒரு விவகாரத்திலும் தலையிடாமலுள்ளார் என்று தெரிகிறது

Previous post நிகழ்நிலைப் பாதுகாப்புச் தடைச்சட்டம் – ஊடகத்துறை எதிர்கொள்ளப் போகும் ஆபத்துக்கள்!
Next post சீருடை இல்லாமல் பொலிஸார், சிவில் சமூகத்துடன் தொடர்பாடலில் ஈடுபடக்கூடாது – மனோ!