ஜோர்டானில் அமெரிக்க இராணுவம் மீது ஆளில்லா விமானத் தாக்குதல் – 3 பேர் உயிரிழப்பு!

ஜோர்டான் நாட்டில் முகாம்களில் தங்கியிருந்த அமெரிக்க இராணுவ வீரர்கள் மீது திடீரென ஆளில்லா விமானம் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், 3 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 25 பேர் காயமடைந்து உள்ளனர். 

சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற குழுக்கள் இத்தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி பைடன் உறுதி கூறியுள்ளார். காஸாவுக்கு எதிரான இஸ்ரேலின் போர் தொடங்கியதில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளில் எதிரி படைகளால் அமெரிக்க வீரர்கள் கொல்லப்படும் முதல் நிகழ்வாக இது பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous post இராஜாங்க அமைச்சராக லொஹான் பதவியேற்பு!
Next post ‘லஞ்சம், ஊழல் அற்ற தூய்மையான அரசியல் கலாச்சாரத்திற்கு இளைஞர்களை தயார்படுத்த வேண்டும்’ – தேசப்பிரிய!