இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சித் தலைவராக உள்ளார். 71 வயதான இம்ரான் கான், 2018 முதல் ஏப்ரல் 2022, வரையிலான காலகட்டத்தில் பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தார்.

இந்நிலையில் அவர் மீது, அரசு ரகசியங்களை கசியவிட்ட குற்றச்சாட்டு உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. அரசு ரகசியங்களை கசியவிட்ட குற்றச்சாட்டில் கடந்த மாதம் இம்ரானுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியிருந்தது

இந்த வழக்கில், தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றம், செவ்வாய்க்கிழமை (30) இம்ரான் கான் மற்றும் அவரது தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் துணை தலைவர் குரேஷிக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, அந்நாட்டின் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே மூன்றாண்டு ஊழல் வழக்கில் சிக்கியுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அந்நாட்டின் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக மற்றொரு அடியை சந்தித்துள்ளார். அரசு ரகசியங்களை கசியவிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

Previous post கணவரின் வெற்றிடத்தை நிரப்ப விருப்பம் – சனத் நிஷாந்தவின் மனைவி!
Next post ‘அநுரகுமார பேசுவதற்கு திறமையானவர்; அவருடைய பேச்சை நம்பி ஏமாற வேண்டாம்’ – சுஜீவ!