சவூதியில் உலக பாதுகாப்பு கண்காட்சி- 2024 (World Defense Show 2024)!

சவூதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல்-சவுத் அவர்களின் ஆதரவின் கீழ், உலக பாதுகாப்பு கண்காட்சி 2024 (World Defense Show 2024) நேற்று பெப்ரவரி 04ம் திகதி ஆரம்பமாகி 08ம் திகதி வரை சவூதியில் ரியாத் நகரில் நடைபெற்று வருகிறது.

சவூதிய அரேபியாவின் இராணுவத் உற்பத்திகளுக்கான பொது ஆணையத்தால் (GAMI) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக் கண்காட்சியில் 45 நாடுகளைச் சேர்ந்த 750க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பாதுகாப்பு அமைச்சர்கள், சர்வதேச தலைவர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் முக்கிய பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். 

இக் கண்காட்சியானது உலகின் பாதுகாப்புத் துறைகளுக்கு இடையிலான தொடர்பாடல்களை மேற்கொள்ள, கூட்டுறவுகளை ஏற்படுத்த, திறன்களை பகிர்ந்துகொள்ள, முதலீடுகளை மேற்கொள்ள மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை கண்டறிதல் போன்ற வாய்ப்புகளுக்கான தளத்தை ஏற்படுத்தி தருகிறது.

மேலும் இக்கண்காட்சியில் தகவல்தொடர்புகளில் நவீன மேம்பட்ட தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப் படுவதோடு அந்த அரங்கில் உள்ள ஊடாடும் திரைகள் மூலம் மிக முக்கியமான ஆயுத அமைப்புகள் மற்றும் அவற்றின் சமீபத்திய முன்னேற்றங்களும் காட்சிப்படுத்தப்படும். 

“எதிர்காலத்துக்கு தயாராகுதல்” என்ற கருப்பொருளின் கீழ் நடத்தப்படுகின்ற இக் கண்காட்சியானது நிலம், கடல், வான் மற்றும் விண்வெளியில் காணப்படுகின்ற உலகின் பல்வேறு பாதுகாப்புத் துறைகளில் உலகளவில் நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்களைக் காட்சிப்படுத்துவதன் மூலம் சர்வதேச பாதுகாப்புத் துறையின் எதிர்காலத்தை கண்முன் காட்டுகிறது.

காலித் ரிஸ்வான்
Previous post நிந்தவூர் ‘Y Two K’ பாலர் பாடசாலையின் விடுகைவிழா – பிரதம அதிதியாக ரிஷாட் பங்கேற்பு!
Next post மூதூரில் போதை ஒழிப்புக் கூட்டம்!