வெளி உலகிற்கு தெரியாமலேயே இந்துத்துவ இந்தியாவில் தகர்க்கப்படும் மஸ்ஜித்களும் தர்காக்களும்!

கட்டுக்கதைகளின் அடிப்படையில் உரிமை கோரப்படும் தற்காலத்தில் வெறும் எழுத்தில் மட்டுமே உள்ள அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் செயல்படும் நீதிமன்றங்களில் அவை வழக்காக எடுத்துக் கொள்ளப்படும்.  இறுதியாக, பல நூற்றாண்டுகளாக முஸ்லிம்களின் வணக்க வழிபாடுகள்  நடைபெற்று வரும் வழிபாட்டுத் தலங்களையும், அவர்களின் வரலாற்றுச் சின்னங்களையும்  பெரும்பான்மையான மக்களின் விருப்பங்களையும் அபிலாஷைகளையும் கருத்தில் கொண்டு மறுத்து உத்தரவு பிறப்பிக்கப்படும்.

இந்துத்துவ இந்தியாவில் இது சகஜமாகி வருகிறது.

இதோ, இப்போது உத்தரப்பிரதேசம் பாக்பத்தில் உள்ள சூஃபி பதுருதீன் ஷாவின் தர்காவை இந்து சமூகத்தினரிடம் ஒப்படைக்க மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தர்காவின் உரிமையை தர்கா பொறுப்பாளர்கள் கைவிட வேண்டும் என்று சொல்லி  நீதிமன்றம் உத்தரவு போட்டுள்ளது.

இவை நம் கவனத்திற்கு வருபவை மட்டுமே. வெளி உலகிற்கு தெரியாமலேயே ஏராளமான மஸ்ஜித்களும் தர்காக்களும் இந்துத்துவ சனாதன பயங்கரவாதிகளால் தகர்க்கப்பட்டு கொண்டிருக்கின்றன.

இன்னமும், இதற்கு எதிர்வினையாற்ற வேண்டிய அவசியமில்லை. பெரிய மனதுடன் அவர்கள் கேட்பதை கொடுத்து விடலாம். அமைதி காக்கலாம். அந்தக் அரசியல் கோயில்கள் மதச்சார்பின்மையின் ஜனநாயகத்தின் அடையாளங்களாக இருக்கும் என நம்புபவர்கள் தாங்களும் முட்டாள்களாகி மக்களையும் முட்டாள்களாக்க முனைகிறார்கள்.

கைப்பற்றப்பட வேண்டிய வழிபாட்டுத் தலங்களின் பட்டியலைத் தயாரித்து நீதிமன்றத்தின் உதவியுடன் அவற்றை ஒவ்வொன்றாகப் பெற முயல்பவர்களைக் தடுத்து நிறுத்த  மக்கள் போராட்டத்தை தவிர வேறென்ன வழி உள்ளது?

படம்: பாக்பத்தில் உள்ள சூஃபி பதுருதீன் ஷா தர்கா

அப்துர் ரஹ்மான்-
Previous post நாட்டை கட்­டி­யெ­ழுப்பும் வேலைத்­திட்­டத்தில் இணைந்து செயற்­ப­டு­வ­தற்கு முஸ்லிம் கட்­சி­க­ளுக்கு அழைப்பு!
Next post 3500 பேர் ஹஜ் யாத்திரைக்கு தயார் – உப­மு­க­வர்கள் மூலம் பயண ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டாமெனவும் எச்சரிக்கை!