2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில் 29 ஆம் திகதிக்கு முன் பெயர்களை பதிவு செய்யுங்கள்!

2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில், தாமதமின்றி பெயர்களை பதிவு செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

எதிர்வரும் 29 ஆம் திகதிக்கு முன்னர் பெயர்களைப் பதிவு செய்யுமாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஒரு வீட்டிலிருந்து சமர்ப்பிக்கப்படும் வாக்காளர் பட்டியலில் 18 வயதுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவருடையதும் அல்லது வீட்டில் தங்கியுள்ள அனைவரினதும் தகவல்களை உள்ளடக்குவது கட்டாயமென அவர் கூறியுள்ளார்.

நிரந்தர வதிவிடத்தை மாற்றாது, திருமணம், கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வசிப்பிடத்தை மாற்றிய அனைவரும் வாக்காளர் இடாப்பில் தமது பெயரை பதிவு செய்ய வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடுகளில் வசிக்கும் பட்சத்தில், அவர்களுக்கு வாக்களிக்க முடியாவிட்டாலும் அவர்களது பெயர்களும் வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Previous post ‘PTA’ பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் – உயர் நீதிமன்றில் 30 மனுக்கள் தாக்கல்!
Next post கொழும்பில் புனித மிஃராஜ் தினம்!