கொழும்பில் புனித மிஃராஜ் தினம்!

முஸ்லிம் சமய பண்பாட்டு திணைக்களத்தின் ஏற்பாட்டில், புனித மிஃராஜ் தினம், கொழும்பு, ஹெவலொக் டவுண், மயுரா பிளேஸ், முஹியத்தீன் ஜூம்ஆப் பள்ளிவாசலில் நேற்று முன்தினம் புதன் கிழமை (07) இஷாத் தொழுகையின் பின்னர் இடம்பெற்றது.   

திணைக்கள பணிப்பாளர்  இசட். ஏ.எம். பைசால் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,  பௌத்த சமய மற்றும் கலாசார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க (பாஉ), ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் (பா.உ),  மத விவகார அமைச்சின் செயலாளர்  மற்றும்  மொஹிதீன் ஜும்ஆப் பள்ளிவாசல் பிரதான இமாம் அஷ் ஷெய்க் வரிதீன் (நூரி), அஷ்ஷேக் எம். நுஸ்ரத் (ஹக்கானி) ஆகியோரின் உரைகளும் துஆ பிரார்த்னைகளும் இடம் பெற்றன.

பிரதேச  முஸ்லிம்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Previous post 2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில் 29 ஆம் திகதிக்கு முன் பெயர்களை பதிவு செய்யுங்கள்!
Next post யானை – மனித மோதலை தடுக்குமாறு கோரி மனு தாக்கல் – சட்டத்தரணி ஷஃபி எச்.இஸ்மாயில்!