கொழும்பில் சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்ற சிறார்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு – ரிஷாட், முஜிபுர் ரஹ்மான் பங்கேற்பு!

76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கொழும்பு-15 இல் அமைந்துள்ள ‘சத்திரு செவன’ அடுக்குமாடிக் குடியிருப்பில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்று, பல்வேறு திறமைகளை வெளிப்படுத்திய சிறார்களுக்கான பரிசளிப்பு விழா, கடந்த ஞாயிற்றுக்கிழமை (04) குடியிருப்பு வளாகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறார்களுக்கான பரிசில்களையும் வழங்கி வைத்தார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் பாயிஸ் அறக்கட்டளையின் தலைவருமான மொஹமட் பஹத் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

Previous post மீண்டும் மின்சார நெருக்கடி ஏற்படும் – மின்சார சபையின் பொது முகாமையாளர்!
Next post மீகொடயில் துப்பாக்கிச் சூடு – சிறுமி காயம்!