அனுரவைத் தொடர்ந்து மைத்திரி இந்தியா பயணம்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் (12) அதிகாலை இந்தியா புறப்பட்டுச் சென்றதாக கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான ஏ.ஐ. 284 ரக விமானத்தில் மைத்திரிபால சிறிசேன இந்தியா பயணம் செய்துள்ளார்.

இந்திய மத்திய அரசாங்கத்தின் விசேட அழைப்பினை ஏற்றுக்கொண்டு மைத்திரி இந்தியா விஜயம் செய்கின்றார்.

இந்திய விஜயத்தை முடித்துக் கொண்டு அவர் அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Previous post நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும் என்ற பெயரில் அரசியல் ஆயுள் காலத்தை நீடித்துக்கொள்ளத் தயாராகி வருகின்றார் ரணில் – சஜித் குற்றச்சாட்டு!
Next post அக்குரணைக்கு சென்ற ரிஷாட் – பிரதேச மக்களுடனும் சந்திப்பு!