அக்குரணைக்கு சென்ற ரிஷாட் – பிரதேச மக்களுடனும் சந்திப்பு!

கண்டி, அக்குரணை பிரதேசத்திற்கு நேற்றையதினம் (11) விஜயம் மேற்கொண்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அப்பிரதேச மக்களை சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது, அக்குரணை நகரில் மழைக் காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்குக் காரணமான பாலத்தினை நேரில் சென்று பார்வையிட்ட அவர்,  இதனால் ஏற்படும் பாதிப்புக்கள் சம்பந்தமாகவும் கேட்டறிந்துகொண்டார்.

இந்த சந்திப்பில், மக்கள் காங்கிரஸ் கட்சியின் அரசியல் அதிகாரபீட உறுப்பினரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான ஹம்ஜாட் ஹாஜியார், உயர்பீட உறுப்பினரான ரியாஸ் இஸ்ஸதீன் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களான றம்சான் ஹாஜியார், நசீர் ஹாஜியார் உட்பட ஊர்ப்பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

Previous post அனுரவைத் தொடர்ந்து மைத்திரி இந்தியா பயணம்!
Next post இலங்கையில் இன்று அறிமுகமாகும் UPI முறை!