ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் 50 ஆண்டு நிகழ்வு – அரச முத்திரை வெளியீடு!

ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம் ஆரம்பிக்கப்பட்டு 50 ஆண்டுகள் முன்னிட்டும் அதன் ஸ்தாபகர் தினத்தினை முன்னிட்டும் நளீம் ஹாஜியார் மற்றும் நளீமியா முகப்பு தோற்றம் கொண்ட 25 ரூபா அரச முத்திரையும் தபால் உரையும் தபால் திணைக்களத்தினால்  வெளியீட்டு வைக்கப்பட்டது.  

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பின ர் மர்ஜான் பழீலின் செலவில் சூரிய மின் சக்தி இணைப்பு நிறுவப்பட்டு அதனையும்  பாராளுமன்ற உறுப்பினர் திறந்து  வைத்தார்.

பேருவளையைச் சேர்ந்த அஷ்ஷேக் எம். ஜே.எம். அரபாத் கரீம் (நளிமி) விரிவுரையாளர் எழுதிய ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம் எண்ணக்கருவும் தோற்றமும் எனும் நுால் ஒன்றும் வெளிட்டு வைக்கப்பட்டது.

நளீம் ஹாஜியாருடன் ஆரம்ப கட்டத்தில் இஸ்லாமிய மறுமலரச்சி சங்கத்தில் இணைந்து இப் பணியில் சேவையாற்றிய ஹாஜிகள் மற்றும் உயிருடன் இருப்பவர்கள் மறைந்தவர்கள் 50 பேருக்கு மேற்பட்டோர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

நளிமியாவின் பழைய மாணவர்கள் அமைப்பின்  தலைவர் யாக்ஹூத் நளீம், தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர்களான மர்ஜான் பழீல், இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், தென்கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் ஜனாதிபதி சட்டத்தரனி பாயிஸ் முஸ்தபா, ஜாமியா கலாபீடத்தின் உஸ்தாத் அஷ்ஷேக் ஏ.சி.அகார் முஹம்மத் தலைவர் ஜாமிஆ நளீமியா பேருவளை.உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Previous post இலங்கையில் இன்று அறிமுகமாகும் UPI முறை!
Next post தொடரும் இஸ்ரேல் – காஸா யுத்தம்; சர்வதேச நீதிமன்றின் தீர்ப்பு!