பிரதான எதிர்க்கட்சியாக மாறவே ஜே.வி.பி முயற்சிக்கிறது!

வலதுசாரிப் பொருளாதார சட்டக கட்டமைப்பினுள் இருந்து கொண்டு உலகுடன் கொடுக்கல் வாங்களை மேற்கொள்ள முடியுமான குழுவாலேயே தற்போதைய சூழ்நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்க முடியும். இவ்வாறான திட்டத்தைக் கொண்ட தரப்பையே மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஐக்கிய மக்கள் சக்தியிடமே இந்த வேலைத்திட்டம் இருப்பதை மக்கள் அறிந்து வைத்துள்ளனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று(12) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்,

“2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட வேண்டும், ரணில் விக்கிரமசிங்கவும் மொட்டும் தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பதற்காக தேர்தலை ஒத்திவைத்து, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கும் வேலைத்திட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஒத்துழைப்பை வழங்காது. 2010 இல் நாட்டைக் காப்பாற்றிய தலைவரும் தரப்பும் 2015 இல் நாட்டை அழித்தது நினைவிருக்கலாம். நாட்டின் வளங்களை கொள்ளையடித்து நாட்டை அராஜகமாக்கியது உங்களுக்கும் நினைவிருக்கலாம். 2019 இல், நாட்டைக் காப்பாற்ற ஒரு ஹீரோவாக கொண்டு வரப்பட்டார். அந்த மனிதன் நாட்டையே வங்குரோத்தாக்கி விட்டு பதவியை விட்டும் சென்று விட்டான். நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வந்ததாக இன்னொருவர் கூறுகிறார். நாட்டின் பொருளாதாரத்தை அவர் கட்டியெழுப்பிய விதமே இதுதான்.

2022 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் அரசாங்கத்தின் செலவினம் 3411 பில்லியன் என மத்திய வங்கியின் நிதி அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. 2023 முதல் 11 மாதங்களில்  அரசாங்கத்தின் செலவினம் 4792 பில்லியன். நாட்டின் செலவு 1381 பில்லியனால் அதிகரித்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வந்த தலைவர் இதைத்தான் செய்துள்ளார். தொடர் செலவுக்காக மட்டும் 1375 பில்லியன் செலுத்தப்பட்டுள்ளது. கடன் மூலதனத்தை செலுத்தாமல் செலவு எவ்வாறு அதிகரித்துள்ளது என்பதை இது காட்டுகிறது. வரிகளை அதிகரித்து, அரசாங்க வருமானமும் 8051 பில்லியனால் அதிகரித்துள்ளது. 2022 செப்டம்பர் 31 இல் அரசாங்கத்தின் மொத்த கடன் 249 பில்லியன் ஆகும். 2023 ஒக்டோபர் 31 இல் கடன் 288 பில்லியன் அதிகரித்துள்ளது. ஒரு நாளில் அரச செலவுக்கும் வருவாய்க்கும் இடையே 7 பில்லியன் இடைவெளி. ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி பதவியில் இருக்கும் போது நாட்டின் செலவுகள் அதிகரித்து வருகிறது. கடன் சுமையும் அதிகரித்து வருகிறது.

பொருளாதாரம் மற்றும் சமூகம் பற்றிய தொலைநோக்கு பார்வையும் சர்வதேச சமூகத்துடன் தொடர்பும் கொண்ட பல்வேறு துறைகளில் திறமையான ஒரு குழுவினரால் மட்டுமே நாட்டை கட்டியெழுப்ப முடியும். வலதுசாரிப் பொருளாதாரக் கட்டமைப்பிற்குள் இருந்துகொண்டு உலகத்துடன் கொடுக்கல் வாங்கள் மற்றும் தொடர்புகளை பேனக் கூடிய ஒரு குழுவாலயே நாட்டை தற்போதைய நிலையில் இருந்து மீட்டெடுக்க முடியும். மக்கள் ஒரு திட்டத்தை விரும்புகிறார்கள். ஐக்கிய மக்கள்  அந்தத் திட்டத்தைக் கொண்டிருக்கிறது என்பது மக்களுக்குத் தெரியும்.

அரசின் வருவானம் என்பது வரிகள் மட்டுமல்ல. நாட்டில் வரிச்சுமையை குறைக்க அரசின் வருவாயை அதிகரிக்க வேண்டும். அரசின் வருவாயை அதிகரிக்க அன்னிய நேரடி முதலீட்டை கொண்டு வர வேண்டும். அன்னிய நேரடி முதலீட்டை கொண்டு வர, மோசடி, ஊழல், வீண்விரயம் ஒழிக்கப்பட வேண்டும். முதலீட்டாளர்களுக்கு நட்புறவான சூழலை உருவாக்க வேண்டும். நாட்டின் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும்.

தேயிலை தேங்காய் இறப்பரை நம்பியிருந்த ஏற்றுமதி பொருளாதாரத்தை ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச ஆடைத் தொழிற்சாலைகளை உருவாக்கி அபிவிருத்தி செய்தார். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் 13 பில்லியன் டொலர்கள் சேர்ந்தது. ஆண்டுக்கு குறைந்தது 10 பில்லியன் டொலர்கள் வருமானம் ஈட்டும் அளவுக்கு நாட்டின் பொருளாதாரத்தை விரிவுபடுத்த வேண்டும். இதன் மூலம் அதிக வரிச்சுமையை குறைக்க முடியும். கடனை அடைக்கும் இயலுமையும் இதன் மூலம் அதிகரிக்கிறது. கடனை அடைக்க அதிக கடன் வாங்கினால் நாடு மேலும் வீழ்ச்சியடையும்.

தோற்போம் என்ற படியால் ஜனாதிபதி தேர்தலை நடத்தாதுள்ளார். ரணில் விக்கிரமசிங்க இரண்டு முறை தோல்வியடைந்தார். 2010 இல் ஜனாதிபதித் தேர்தலில் இன்னொரு குதிரை கொண்டுவரப்பட்டது. 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னொரு குதிரை கொண்டுவரப்பட்டது. ரணில் விக்கிரமசிங்கவுக்கு இம்முறை ஜனாதிபதி பதவி புண்ணியத்தால் கிடைத்தது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்கள் இருக்கும் பொதுக்கூட்டங்களுக்கு செல்வதில்லை. அரச அதிகாரிகளுடனான கூட்டங்களுக்கே செல்கிறார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுக்கூட்டங்களுக்கு செல்ல பயப்படுகிறார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் பின்னரே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டும். ஆனால் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும். ரணில் விக்கிரமசிங்கவும் மொட்டும் தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பதற்காக தேர்தலை ஒத்திவைத்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கும் வேலைத்திட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஒத்துழைப்பை வழங்காது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை பற்றி அரச சார்பற்ற நிறுவனங்கள் பேசுகின்றன. ஆனால் வரிச்சுமையை குறைப்பது குறித்து அரச சார்பற்ற அமைப்புக்கள் பேசவில்லை, 9 இலட்சம் வீடுகளுக்கு மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்ட போது ஒரு வார்த்தை கூட பேசவில்லை. குழந்தைகள் மயக்கம் போட்டு விழுந்த போது ஒரு வார்த்தை கூட பேசவில்லை. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருக்க வேண்டும். ஆனால் பாராளுமன்றத்திற்கு மூன்றில் இரண்டு பெருன்பான்மை அதிகாரம் இல்லை. நாட்டை இரத்தக் கடலாக மாற்றும் நெருக்கடியைத் தவிர்க்க மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு வாய்ப்பு வழங்குங்கள்.மக்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்குங்கள். அவ்வாறு வழங்கும் பட்சத்தில் மக்கள் தங்கள் விருப்பப்படி முடிவுகளை எடுப்பர்.

பிரதான எதிர்க்கட்சியாக மாறவே ஜே.வி.பி முயற்சிக்கிறது. இந்திய விஸ்தரிப்புவாதம் குறித்து பேசிவிட்டு, 1971 இல் கிளர்ச்சியைத் தொடங்கி, ஏராளமான இளைஞர்களைக் கொன்று, நாட்டிலுள்ள முதலீட்டாளர்களை விரட்டியடித்தது இந்த மக்கள் விடுதலை முன்னனியினரே. முதலீட்டாளர்களிடம் பணம் பறித்து, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இடையூறு விளைவிக்கும் ஒரு குழு, இந்தியாவில் உள்ள முதலீட்டாளர்களைச் சந்திக்கப் போவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நாட்டின் இளைஞர் சமூகத்தின் எதிர்காலத்தையே அழித்த கும்பலே இந்தியாவுக்குச் சென்று வந்தது. 45000 கோடி முதலீடுகளை திருப்பியனுப்புதல்,அரச நிறுவனங்கள்  மறுசீரமைக்கப்படுவதை எதிர்த்த மக்கள் விடுதலை முன்னனியே நாட்டின் பொருளாதாரம் வங்குரோத்துக்கு ஓர் காரணம். பொது நிறுவனங்கள் மறுசீரமைக்கப்பட்டு இலங்கையின் மறுமலர்ச்சி வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் இன்று இலங்கையின் பொருளாதார நிலை மேம்பட்டிருக்கும். இந்திய முதலீடுகளின் நன்மைகள் மற்றும் முதலீட்டாளர்களுடன் இணைவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்து மக்கள் விடுதலை முன்னனியினர் படித்து வருகின்றனர். பிரதான எதிர்க்கட்சியாகவே ஜே.வி.பி முயற்சிக்கிறது” என்றார்.

Previous post புத்தளம், பாத்திமா அஹதியா பாடசாலையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு!
Next post ஏறாவூர் சாதுலியா பாலர் பாடசாலை விடுகை விழா – அலிசாஹிர் மௌலானா பங்கேற்பு!