மொட்டுக் கட்சியிடம் பணமில்லை – சாகர!

பல அரசியல் கட்சிகள் ஏற்கனவே ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்துள்ள போதிலும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தனது வேட்பாளரை தேர்தல் நெருங்கும் வேளை பெயரிட தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி வேட்பாளருக்கு பெயர் சூட்டப்பட்டு தேர்தல் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டால் அந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு பெருமளவு பணம் செலவாகும் என கண்டறியப்பட்டுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஏனைய கட்சிகளைப் போன்று இவ்வாறான விடயங்களைச் செய்வதற்கு தமது கட்சியிடம் பணம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கட்சிக்கு ஏற்கனவே பல யோசனைகள் கிடைத்துள்ளதாக குறிப்பிட்ட காரியவசம், இந்த முன்மொழிவுகள் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Previous post ஏறாவூர் சாதுலியா பாலர் பாடசாலை விடுகை விழா – அலிசாஹிர் மௌலானா பங்கேற்பு!
Next post அலி சப்ரி ரஹீம் பயணித்த கார் விபத்து!