A/L பரீட்சை பெறுபேறு - தொடர்ந்தும் சாதனை படைக்கிறது சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரி! - Sri Lanka Muslim

A/L பரீட்சை பெறுபேறு – தொடர்ந்தும் சாதனை படைக்கிறது சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரி!

Contributors

சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரியில் இம்முறை க.பொ.த.உயர்தர பரீட்சைக்கு தோற்றிய 10 மாணவிகளும் அனைத்து பாடங்களிலும் சிறந்த பெறுபெறுகளுடன் சித்தியடைந்துள்ளனர்.

இவர்களுள் 04 மாணவிகள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இவர்கள் இக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு, உயர்தர பரீட்சைக்கு தோற்றிய 06வது தொகுதி மாணவியர்கள்களாவர்.

முன்னைய 05 தொகுதி மாணவிகளும் இவ்வாறு சிறந்த பெறுபேறுகளுடன் சித்தியடைந்து, பெரும்பாலானோர் பல்கலைக் கழகங்களுக்கும் உயர் கல்வி நிறுவனங்களுக்கும் தெரிவாகியிருந்தனர்.

ஏற்கனவே இக்கல்லூரியை சேர்ந்த 15 மாணவிகள் தென்கிழக்கு பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டுள்ளனர்.

இக்கல்லூரியில் அல்ஆலிம் கற்கை நெறி போதிக்கப்படுவதுடன் ஜீ.சி.ஈ. உயர்தரப் பரீட்சைக்கும் மாணவிகள் தயார்படுத்தப்படுகின்றனர். இங்கு பயிலும் மாணவிகள் மூன்றாம் வருடத்தில் ஜீ.சி.ஈ. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதுடன் நான்காம் வருடத்தில் அரசாங்க அல்ஆலிம் பரீட்சைக்கு தோற்றி மௌலவியாக்களாக வெளியேறுகின்றனர்.

இதுவரை இங்கிருந்து 30 பேர் மெளலவியாக்களாக வெளியேறியுள்ளனர். இவர்களுள் பலர் பல்கலைக்கழக பட்டதாரிகள் என்பது சிறப்பம்சமாகும்.

கடந்த 2012ஆம் ஆண்டு தொடக்கம் சாய்ந்தமருதில் தனியார் கட்டிடம் ஒன்றில் இயங்கி வந்த இக்கல்லூரி, தற்போது சாய்ந்தமருது பொலிவேரியன் நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டிடத் தொகுதியில் இயங்கி வருகிறமை குறிப்பிடத்தக்கது.

இறைவன் துணையுடன் கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி அவர்களின் அர்ப்பணிப்புமிக்க தலைமைத்துவ வழிகாட்டலில் நிர்வாகத்தினர் போதனாசிரியர்கள் மற்றும் பயிலுனர்களின் ஒத்துழைப்புடன் சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரி தொடர்ந்தும் சாதனைகளுடன் வீறுநடை போடுகின்றமை பாராட்டுக்குரியதாகும்.

 

அஸ்லம் எஸ்.மௌலானா

Web Design by Srilanka Muslims Web Team