ACMC 23 ஆசனங்களுக்கு மேல்பெற்று கல்முனை மாநகர சபையைக் கைப்பற்றும் - Sri Lanka Muslim

ACMC 23 ஆசனங்களுக்கு மேல்பெற்று கல்முனை மாநகர சபையைக் கைப்பற்றும்

Contributors
author image

P.M.M.A.காதர்

-நேர்காணல்:-பி.எம்.எம்.ஏ.காதர்-


கல்முனை மாநகர சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியியின் சார்பாக பெரியநீலாவணை 2ஆம் வட்டாரத்தில் மயில் சின்னத்தில் போட்டியிடும் தொழிலதிபர் ஏ.நெய்னா முஹம்மட்டுடனான நேர்காணல்.   

கேள்வி:-தற்பொழுது நடைபெறவுள்ள வட்டாரத்தேர்தல் முறைபற்றி உங்களுடைய கருத்து என்ன ?
பதில்:-வட்டாரத்தேர்தல் முறையென்பது சிறந்த தேர்தல் முறையாகும் காரணம் ஒரு குறுகிய பிரதேசத்;தை உள்ளடக்கி அந்தப் பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களுடைய தேவைகளைக் கண்டறிந்து அவர்களுக்கு சிறந்த முறையிலே சேவையாற்ற முடியும் அந்த வகையிலே இந்த வட்டாரத்தேர்தல் முறை வரவேற்கக்கூடியது என்று சொல்லலாம்.

கேள்வி:-நீங்கள் போட்டியிடுகின்ற பெரியநீலாவணை 2ஆம் வட்டாரத்திலே எவ்வாறான பிரச்சினைகளை மக்கள் எதிர்நோக்கியிருக்கின்றார்கள்.

பதில்:-இந்த வட்டாரத்திலே தொழில் பிரச்சினை,வீதிப்பிரச்சினை,பாடசாலை அபிவிருத்தி உள்ளீட்ட நிறைப்பிரச்சினைகள் இருக்கின்றன.முக்கியமான பிரச்சினையாக வீதிப்பிரச்சினை காணப்படுகின்றது.முக்கியமாக வீசி வீதி உள்ளீட்ட பல வீதிகள் பயணிக்க முடியாமல் சிதைந்து காணப்படுகின்றது.

விதிகளைப் புனரமைப்பதன் மூலம் பல விடையங்களுக்கு அதன் மூலம் தீர்வு காணமுடியும்.அதேபோன்று எனது வட்டாரத்திலே இருக்கின்ற ஒரே ஒரு பாடசாலை புலவர்மணி ஷரிபுத்தீன் வித்தியாலயம் அந்தப் பாடசாலை மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது இதைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை மிகவும் அவசியமாக உள்ளது.அதே போன்று படித்துவிட்ட பல இளைஞர்,யுவதிகள் தொழில் வாய்ப்பு இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகின்றார்கள்,மேலும் இப்பிரதேச மீனவர்கள் மீன்பிடித்தொழில் மிகவும் பின்டைவில் உள்ளார்கள்,மருதமுனையின் பாரம்பரிய நெசவுக்ககைத் தொழில் பாதிக்கப்பட்டிருக்கின்றது இவற்றுக்கெல்லாம் தீர்வு காணவேன்டியிருக்கின்றது.

கேள்வி:-இந்தத்தேர்தலிலே நீங்கள் வெற்றி பெற்றால் உங்கள் வட்டாரத்திலே இருக்கின்ற பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பீர்கள் ?

பதில்:-நான் வெற்றி பெற்று அரசியல் அதிகாரம் கிடைக்குமானால் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் அமைச்சர் றிஷட் பதியுதீன் அவர்களின் கவனத்திற்கு இந்த வட்டாரத்தின் பிரச்சினைகயைக் கொண்டு சென்று அவரின் ஆலோசனையைப் பெற்று இந்த வட்டார மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண இருக்கின்றேன்.

இருக்கின்ற பிரச்சினைகளில் சுயதொழிலுக்கு முன்னுரிமை வழங்கி படித்து விட்டு அரச தொழிலைப் பெறமுடியாத இளைஞர்.யுவதிகளை இனங்கண்டு அவர்களின் தகைமைகளுக்கு ஏற்றவாறு சிறந்த சுய தொழில் முயற்சிகளை தெரிவு செய்த அவர்களின் எதிர்காலத்திற்கு வழிகாட்டுதல்.

அதே போன்று மின்பிடித்தொழிலில் பாதிக்கப்பட்டிருக்கின்ற  மீனவர்களுக்கு நவீன ஆழ்கடல் மீன்பிடி பயிற்சிகளை வழங்கி அவர்களின் மின்பிடியை ஊக்கவிக்கின்ற செயற்திட்டங்களையும் அரசாங்கத்தின் மூலமாக முன்னெடுக்க திட்டமிட்டிருக்கினறேன்.மருதமுனையின் பாரம்பரிய நெசவுத் தொழிலை நவீன முறையில் முன்னேற்றுவதற்கு நெசவாளர்களின் ஆலோசனைகளைப் பெற்று அதற்கும் தீர்வைக்காண்பதோடு இந்த வட்டாரத்தை ஒரு கைத்தறிக் கிராமமாக மாற்றுவதற்கும்,நவீன முறையிலே நெசவுத் தொழிலை மேம்படுத்த நெசவுப்ட பயிற்சி நலையமொன்றை அமைப்பதற்கும் திட்டமிட்டுள்ளேன்.
 
கேள்வி:-கடந்த 17 வருடங்களாக கல்முனை மாநகர சபையை ஆட்சி செய்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்;கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றார்கள் இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:-மக்களின் வாக்ககளைப் பெற்று 17 வருடங்களாக ஆட்சி செய்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆட்சிக் காலத்தில் மக்கள் எதிர்நோக்கி பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படவில்லை என்பது முற்றிலும் உண்மையானதாகும்.தேர்தல் காலங்களில் வழங்கிய வாக்குறுதிகளில் பத்து சதவீதமானவற்றைக் கூட அவர்கள் நிறைவேற்றவில்லை.

தேர்தல் காலங்களில் போரளிகள் என்றும்,முஸ்லீம்களுக்கான போராட்டங்கள் என்ற கோஷங்களை முன்வைத்து பாடல்களை ஒலிபரப்பி மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வருகின்றார்கள் பின்னர் மக்களை மறந்த விட்டு தங்களின் நலன்களில் மட்டுமே அக்கறைகாட்டி மக்களைப் புறந்தள்ளி விட்டு அடுத்த தேர்தல் வந்ததும் மீண்டும் வேதளம் முருங்கை மரத்தில் என்பது போல மாறிவிடுகின்றார்கள்.

கல்முனை மாநகரத்தை அபிவிருத்தி செய்யப் போகின்றோம் என்று சொல்லிச் சொல்லி இது வரை ஆக்க பூர்வமான எந்த அபிவிருத்தியையும் செய்யவில்லை.கல்முனை மாநகர சபை இயங்குகின்ற கட்டம் கூட பாழடைந்த மண்டபம் போல்காணப்படுன்றது மழைகாலங்களில் கட்டம் வெள்ளம் நிறைந்த காணப்படுகின்றது இது போதும் அவர்கள் சேவை செய்யவில்லை என்று உறுதியாக் சொல்வதற்கு.

கல்முனை மாநகர சபைக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட எத்தனையோ உள்ளுராட்சி சபைகள் இன்று பெறுமதியான கட்டங்களுடன் தலைநிமிர்ந்து நிற்கின்றது ஆனால் கல்முனை மாநகர சபைக்கட்டம் மட்டும் இடிந்து விழும் நிலையில் காணப்படுகின்றது.இதுதான் இவர்களின் அபிவிருத்தியும்,சேவையும்.பிரதேச சபையாக,நகர சபையாக,மாநகர சபையாக தரமுயர்ந்த போதும் கட்டம் மட்டம் இன்னும் தரமுயரவில்லை.செய்ய வருகின்றவர்களையும் செய்ய விடாமல் தடுப்பதிலே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னிலை வகுக்கின்றது.

கேள்வி:-இந்தத் தேர்தலிலே உங்களுடைய வெற்றிவாய்பு எவ்வாறு உள்ளது ?
பதில்:-இம்முறை மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்திருக்கின்றார்கள் அதனால் எங்கள் கட்சிக்கு நல்ல சாதகமான சூழல் காணப்படுகின்றது.நிச்சயமாக கல்முனை மாநகர சபையிலே எனது வெற்றி வாய்ப்பு மட்டுமல்ல எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வெற்றிவாய்ப்பும் உறுதிப்படுத்தப்பட்டு விட்டது.நிச்சயமாக நாங்கள் 23 ஆசனங்களுக்கு மேல்பெற்று கல்முனை மாநகர சபையை ஆட்சி செய்வோம்.  

 

Web Design by Srilanka Muslims Web Team