
‘ஐக்கிய மக்கள் சக்தியால் மட்டுமே நாட்டை திறமையாக ஆட்சி செய்ய முடியும்’ – கபிர் ஹாசிம்!
ஐக்கிய மக்கள் சக்தியால் மட்டுமே நாட்டை திறமையாக ஆட்சி செய்ய முடியுமென பாராளுமன்ற உறுப்பினர் கபிர் ஹாசிம் மொனராகலையில் நிகழ்வொன்றில் பேசிய போது தெரிவித்தார். பல்வேறு சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி பதவியை அடைவதற்கான சாத்தியங்கள் இருந்தபோதும், அவர் தனது கொள்கையில் உறுதியாக இருந்தமையே சஜித் பிரேமதாசவுடன் நான் இணைந்து கொள்ள முக்கிய காரணம் என அவர் மேலும் தெரிவித்தார். ஆட்சியமைக்க ஒரு கட்டளை அவசியமானது. அது சட்டபூர்வமான தேர்தலின் மூலமே சாத்தியமாகும் என அவர் தெரிவித்தார்.