BCAS Campus இன் யாழ் வளாகம் ஏற்பாடு செய்திருந்த ஒரு நாள் செயலமர்வு - Sri Lanka Muslim

BCAS Campus இன் யாழ் வளாகம் ஏற்பாடு செய்திருந்த ஒரு நாள் செயலமர்வு

Contributors
author image

Farook Sihan - Journalist

அனைவருக்கும் தகவல் தொழிநுட்பம் எனும் தொனிப் பொருளில் BCAS Campus இன் யாழ் வளாகம் ஏற்பாடு செய்திருந்த ஒரு நாள் செயலமர்வு நேற்று (09.11.2014) காலை 9 மணி தொடக்கம் மாலை 4 மணிவரை BCAS Campus இன் பிரதான மண்டபத்தில் நடை பெற்றது. இச் செயலமர்வு BCAS யாழ் வளாக இணைப்பாளர் சாந்தன் அய்யாத்துரை மற்றும் வியாபார இணைப்பாளர் யூசுப் சாதிகீன் ஏற்பாட்டிலும் தகவல் தொழிநுட்பத்துறை விரிவுறையாளர்களான திரு.கி.யாதவராஜன் B.Sc. (Computer Eng.)திரு.ச.திஷோபன் B.Sc. (Computer Eng.)திரு.க.கேசிகன் B.Sc. (Computer Eng.) திரு.பா.சபேஷன் B.Sc. (ICT) திரு.க.உதயகுமார் B.E (Electronic & Communication Eng.) மேற்பார்வையில் தகவல் தொழிநுட்பத்துறை மாணவர்களால் நடத்தப்பட்டது.

 

எவரும் எதிர்பாராத வேகத்தில் வளர்ந்து வந்த தகவல் தொழிநுட்பம் முறையாக பயன்படுத்தப்பட வேண்டுமெனவும் அவ்வாறு தவறும் பட்சத்தில் பல்வேறு பட்ட முறைகேடுகள் ஏற்படுவதாகவும் குறிப்பிட்ட திரு. சாந்தன் அய்யாத்துறை இவ்வாறான பாதிகப்புகள் அன்மையில் உணரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இவற்றை முடியுமான அளவு குறைப்பதற்கான ஒரு நீண்ட வேலை திட்டத்தை முன்னெடுப்பதாகவும் அதில் முதற்கட்டபமாக இவ்வாறான கருத்தரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இச் செயற்பாட்டின்மூலம்

 

பொதுமக்ளுக்கு தகவல் தொழிநுட்பத்துறையின் அடிப்படைகள் கற்பிக்கப்படுவதுடன் விழிப்புணர்வும் வழங்கப் படுகின்றது. இதனால் தத்தமது பிள்ளைகள் தவறிழைப்பதை இயன்றவரை குறைக்கமுடியும் என தான் நம்புவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

புதிய தொழில் நுட்பங்களுக்கோர் அறிமுகம் (Introduction to emerging technologies)நவீன தொடர்பாடலின் பரிணாமவளர்ச்சி(Evolution of communication)கைப்பேசி–பயன்பாடும் பாதுகாப்பும் (Mobile application and security),நவீன வாழ்வில் கணனியின் பங்கு(The role of computer in modern life) கணனி அமைப்பும் பிரயோகமும் (Computer assembling & application)சமூகவலைத தளங்கள் பற்றியவிழிப்புணர்வு

 

(Awareness of social networks) இணையமூலம் படங்களைப் பகிர்தல்

(Online photo & video sharing) இணையம் வழி பொருட்கள் வாங்கல்

(Online shopping) இணையத்தின் ஊடாகப் பணக்கொடுப்பனவும் பாதுகாப்பும்

 

(Online payments & security gateways)மற்றும் தகவல் தொழில் நுட்பத்தைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துதல்(How we have to use Technology with security) ஆகிய தலைப்புகளில் விரிவான விளக்கங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

 

அத்துடன் இந்நிகழ்வில் கலந்து கொணடவர்களில் ஒருவர் குறிப்பிடுகையில் தாங்கள் இக்கருத்தரங்கில் அதிக பயனடைந்ததாகவும் இவ்வாறான சமூகப் பொறுப்புக்களை மேலும் மேலும் BCAS யாழ் வளாகம் மேற்கொள்ளவேண்டுமென கேட்டுக்கொண்டதுடன் ஏற்பாட்டுக்குழுவினருக்கு கலந்துகொண்டவர்கள் சார்பில் நன்றியும் தெரிவpத்துக்கொண்டார்.

 

வியாபார இணைப்பாளர் சாதிகின் தனது கருத்தில் BCAS யாழ் வளாகம் இவ்வாறான செயற்பாடுகளை மேலும் முன்னெடுப்பதாகவும் அதில் சமுகம் சார்ந்த செயற்பாடுகளையும் குறிப்பிட்டார். குருதி நன்கொடைஇ வடக்கிற்கான இருதய சத்திரசிகிச்சை கூடம் நிறுவுவதற்க நிதி சேகரிப்புஇ பாடசாலை மாணவர்களுக்கான இலவசக்கருதரங்கு என பல்வேறு பட்ட செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் மேலும் குறிப்பிட்டார்.

 

BCAS Campus யாழ் மாவட்டத்தில் உருவாக்கப்பட்டு குறுகிய காலத்தில் அதிகளவான மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளதுடன் வடமாகண மாணவர்களின் நன்மதிப்பையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

முற்றிலும் இலவசமாக நடைபெற்ற இக்கருத்தரங்கில் வயது வேறுபாடின்றி பலர் ககலந்து கொண்டிருந்தனர்.

Web Design by Srilanka Muslims Web Team