HNDE பாடநெறிக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. - Sri Lanka Muslim

HNDE பாடநெறிக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

Contributors

 

இலங்கை உயர்கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தினால் நடாத்தப்படும் உயர் தேசிய பொறியியல் டிப்ளோமா கற்கை நெறிக்கு 2014  புதிய  கல்வி ஆண்டுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இது  3 1/2  வருட கால முழுநேரக் கற்கை நெறியாகும். மாணவர்களின் நலன் கருதி Hostel, Seasons (bus/train) , Mahapola scholarship ஆகிய வசதிகளும் வழங்கப்படுகின்றன.

 
இது பின்வரும் துறைகளை உள்ளடக்கியுள்ளது.

  • Higher National Diploma in Civil Engineering.
  • Higher National Diploma in Electrical  Engineering.
  • Higher National Diploma in Mechanical  Engineering.
  • Higher National Diploma in Building Services Engineering.
  • Higher National Diploma in Quantity Surveying.

பின்வரும் தகமைகளை உடையவர்கள் விண்ணப்பிக்கமுடியும்.

  • G.C.E A/L பௌதீக விஞ்ஞானப் பிரிவில் ஒரே அமர்வில் மூன்று பாடங்களிலும் சித்தி பெற்றிருத்தல்.
  • G.C.E O/L ஆங்கிலத்தில் சித்தி பெற்றிருத்தல்
  • 2012,2011,2010ஆகிய ஆண்டுகளில் உயர்தரப்  பரீட்சைக்கு தோற்றியவராக இருத்தல்.

 

மேலதிக தகவல்களை 2013.12.06 இல் வெளிவந்த தினகரன்,  Dailynews ஆகிய பத்திரிகைகளிலும் எதிர்வரும் 2013.12.13 இல் வெளிவரும் அரச வர்த்தமானியிலும் பார்வையிடலாம் .

links www.sliate.ac.lk,  www.hndelk.com

Contact 0771179090, 0712307690

 

 

Web Design by Srilanka Muslims Web Team