IMF – உலக வங்கி உச்சி மாநாடு இன்று ஆரம்பம் – இலங்கை பிரதிநிதிகளும் பங்கேற்பு!

Read Time:1 Minute, 28 Second

சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கி குழுமம் (WBG) ஆகியவற்றின் 2022 ஆண்டு கூட்டங்கள் இன்று (10) ஆரம்பமாகி, அக்டோபர் 16 ஆம் திகதி வரை வொஷிங்டன் DC இல் உள்ள IMF மற்றும் உலக வங்கி குழுமத்தின் தலைமையகத்தில் நடைபெறுகிறது.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த உச்சி மாநாட்டிற்கு எட்டு பிரதிநிதிகளை அனுப்ப இலங்கை தீர்மானித்துள்ளது. இராஜாங்க நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தலைமையில், இலங்கையின் தூதுக்குழுவினர் கலந்துகொள்ளவுள்ளனர்.

மேலும், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர், நிதிச் செயலாளர் மற்றும் பலர் இராஜாங்க அமைச்சருடன் செல்லவுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி குழுவின் வருடாந்த கூட்டங்கள் இலங்கையின் கடனை மறுசீரமைப்பதற்கும், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிதி உதவிகளைப் பெறுவதற்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று பதில் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

Previous post “ஷெய்ஹுல் உலமா” – அட்டாளைச்சேனையில் உலமாக்கள் கௌரவிப்பு!
Next post ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!