N.M. டரவல்ஸ் முஹம்மத் ஹாஜியாரின் மகன் ஹூமைட் புற்றுநோயினால் வபாத்

Read Time:1 Minute, 27 Second

மகரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு ஒரு பெட் ஸ்கணா் மெசினை பெற்றுக் கொடுக்கவே இவா் தனது தந்தையின் ஊடாக 20 கோடி ரூபா மெசினை பெற்றுக் கொடுக்க திட்டமொன்றை வகுத்து அதில் வெற்றி கண்டாா். கதிஜா பவுண்டேசன் ஊடாக இத் திட்டத்திற்காக முஹம்மத் மிகவும் போராடி வெற்றிகண்டாா்.

அதுபற்றிய விழிப்புணர்வு பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டவருமான மொஹமட் ஹாஜியாரின் மகன் ஹுமைட் நேற்று 11.09.2017 வபாத்தாகியுள்ளார்.

மிக இளம் வயதில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டாா்.

இவரது ஜனாஸா இன்று(12) 04.30 மணிக்கு தெஹிவளை ஜூம்ஆப் பள்ளி வாசலில் நல்லடக்கம் செய்யப்படும். ஜனாஸா 46c களுபோவில வைத்தியசாலை வீதி தெஹிவளையில் வைக்கப்பட்டுள்ளது.

இவருக்கு ஜென்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கம் கிடைக்கவும் இவரது கபூர் வெளிச்சமாக இருப்பதற்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வோம்.

#Humaid Passed Away.. Janaza/Funeral Today 12 th Sep 4.30 pm 

#Home 46C Hospital Rd Dehiwala to Muhiyadeen Grand Jumma Mosque Burial Ground

Previous post கல்முனை மாநகர சபைத் தேர்தலில் பொதுச் சுயேட்சைக் குழு; சாய்ந்தமருது ஷூரா கவுன்ஸில் ஆலோசனை
Next post கேரள டயரீஸ் -1 நுால் வெளியீடு