ஷிரால், மைத்திரிக்கு ஐ.தே.கவில் இடமில்லை:

ஐ.தே.கவின் முன்னாள் மேல் மற்றும் தென் மாகாண சபை உறுப்பினர்களான ஷிரால் லக்திலக மற்றும் மைத்திரி குணரத்ன ஆகியோருக்கு இம்முறை வேட்பு மனு வழங்காதிருக்க ஐ.தே.க தீர்மானித்துள்ளது.     ஐ.தே.கவின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.     ஐ.தே.கவின் தலைமைத்துவ சபைத் தலைவர் கரு ஜயசூரிய தலையில் கூடிய வேட்பு மனு குழு இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.   எனினும் நடிகை நதீஷா ஹேமமாலிக்கு வேட்பு மனு வழங்க ஐதேக தீர்மானித்துள்ளது.

Read More

சிங்கபூரில் பேரியல் அஷ்ரப் தலைமையில் நடைபெற்ற 66ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் (படங்கள்)

  -சிபான் அபூதாஹிர்- சிங்கப்பூருக்கான இலங்கை தூதுவரும், முன்னாள் அமைச்சருமான பேரியல் அஷ்ரப் தலைமையில் இலங்கையின் 66 ஆவது சுந்திர தின நிகழ்வுகள் சிங்கப்பூரிலுள்ள இலங்கைத் தூதுரகத்தில் நடைபெற்றது. இந்  நிகழ்வில் பௌத்த மதகுருக்கள் , சிங்கப்பூர் அதிகாரிகள்,  தூதுவராலயத்தில் பணிபுரிபவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read More

தேசியக் கொடியை ஏற்ற மறுத்த வடமாகாண உறுப்பினர்! பாடசாலை நிகழ்வில் பரபரப்பு

தேசியக் கொடியை ஏற்றமாட்டேன் என்று வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மறுத்த சம்பவம் முல்லைத்தீவில் அண்மையில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு ஒலுமடு தமிழ் வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டிக்கு பிரதம விருந்தினராக அழைக்கப்பட்ட ரவிகரனை, இலங்கையின் தேசியக் கொடியை ஏற்றி வைக்க அழைத்தபோது, ரவிகரன் அதை வெளிப்படையாக மறுத்த நிகழ்வு அங்கு கூடியிருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.     இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,     முல்லைத்தீவு ஒலுமடு தமிழ் வித்தியாலய இல்ல விளையாட்டுப்போட்டி பாடசாலை…

Read More

610 கிலோ நிறையுடைய காலிதின் உடம்பு 320 கிலோவாக குறைப்பு -மன்னர் அப்துல்லா உதவி

  -ரியாத்- சவுதி அரேபியாவில் ஜஷான் பகுதியை சேர்ந்தவர் காலித் மொக்சன் அல்-ஷயோரி (30). இவர் 610 கிலோ உடல் எடை இருந்தார். இதனால் தனது வாழ்வில் மிக அவதிப்பட்டு வந்தார்.       இதை அறிந்த சவுதி அரேபிய மன்னர் அப்துல்லா இவரது உடல் எடையை குறைக்க உத்தரவிட்டார். அதற்கான செலவை அரசு ஏற்பதாகவும் அறிவித்தார். இதையடுத்து அவர் ரியாத்தில் உள்ள மன்னர் பகத் மெடிக்கல் சிட்டி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.      …

Read More

சமாதானத்தை விரும்பாதவர்களே ஜெனீவாவில் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்!

66 ஆவது சுதந்திர தின உரையில் ஜனாதிபதி-   பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் நாட்டில் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுகின்றன. சமாதானத்தை தெற்கு மக்கள் மட்டுமல்ல வடக்கு மக்களும் அனுபவித்துகொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுகளை முன்வைக்க முயற்சிக்கின்றனர். அவ்வாறு  முயற்சிப்போர் சமாதானத்தை விரும்பாதவர்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.     66ஆவது சுதந்திரதினத்தின் பிரதான வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.     இந்த வைபவம் கேகாலை சுதந்திர மாவத்தையில்…

Read More

சட்டையில் இருந்த ‘ஐ போன்’ வெடித்து மாணவி காயம்

அமெரிக்காவில் மைனே பகுதியில் உள்ள கென்னெ பங்க்ஸ் நகரில் நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு 8–வது வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் பள்ளிக்கு ‘ஐ போன்’ கொண்டு வந்திருந்தார். அதை தனது சட்டை பையில் வைத்திருந்தார். வகுப்பறையில் இருந்த போது அந்த ‘ஐ போன்’ திடீரென வெடித்து தீப்பிடித்தது. இதனால் மாணவி அலறியதால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. உடனே, உடையில் பிடித்த தீயை ஆசிரியர்கள் அணைத்தனர். இதில், மாணவியின் தொடை மற்றும் பின்பகுதியில் காயம் ஏற்பட்டது….

Read More

ஊடகவியலாளர் எஸ்.எம்.மரிக்காருக்கு ஐ.தே.க சார்பில் போட்டியிட சந்தர்ப்பம்

இம்முறை மேல் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு ஊடகவியலாளர் எஸ்.எம் மரிக்கார் வேட்புமனு பத்திரத்தில் கைச்சாத்திட்டுள்ளார்.     அவர் கொழும்பு மாவட்டம் சார்பில் போட்டியிடவுள்ளார்.     சிறிகொத்தாவில் உள்ள கட்சித் தலைமையகத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் முன்னிலையில் அவர் கைச்சாத்திட்டுள்ளார்.     ஊடகவியலாளராக நீண்டகாலம் பணியாற்றிய எஸ்.எம் மரிக்கார், சிரச எப்.எம்மின் அலைவரிசை பிரதானியாகவும், எம்.பீ.சீ/ எம்.ரீ.வீ ஊடக வலையமைப்பின் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

கஃபாவில் தொழில் புரிவோருக்கு விசேட பயிற்சிகள்!

   -முஹம்மது மஃதூம்-    ஹஜ் மற்றும் உம்ரா புனித கடமைகளின் போது புனித தளமான கஃபாவை தரிசிக்க செல்வோருக்கான சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் அங்கே தொழில் புரிவோருக்கு தொடர்பாடல்  திறனை மேம்படுத்த பல்வேறு பயிற்ச்சிகளை வழங்குவதற்கு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.     புனித நகரான மக்காவில் அமைந்துள்ள தலை சிறந்த பல்கலைக் கழகமான உம் அல் குரா பல்கலைக் கழகத்தின் அனுசரணையுடனேயே மேற்படி பல் துறை சார்ந்த தொழிலாளர்களுக்கு பல்வேறுவிதமான பயிற்ச்சிகள் வழங்கப்படவுள்ளன.    …

Read More

கொழும்பு ஊடகவியலாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த சுதந்திரதின நிகழ்வுகள் (புகைப்படம்)

-அஸ்ரப் ஏ சமத்- கொழும்பு ஊடகவியலாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இலங்கையின் 66வது சுதந்திரதின நிகழ்வுகள் இன்று 4ஆம் திகதி தெஹிவளை பாலத்தருகில் உள்ள மீலாத் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.     இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட ரத்மலானை பிரதேச செயலாளர் ஹேமசிறி பியதிலக்க தேசியக்கொடியையும் பாடசாலை அதிபர் திருமதி எஸ்.எம்.முஹம்மட் பாடசாலைக் கொடியை ஏற்றி வைத்தார்.     கொழும்பு ஊடகவியலாளர் சங்கத்தினால் 100க்கும் மேற்பட்ட நூல்களும் குர்ஆன் மொழிபெயர்ப்புப் 20 பிரதிகளும் சங்கத்தினால் தலைவர் எம்.ஐ.எம்.அஸ்லம் செயலாளர் அஸ்ரப்…

Read More

கல்முனை மாநகர சபையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சுதந்திர தின வைபவம் -(புகைப்படம்)

-பி.எம்.எம்.ஏ.காதர்- கல்முனை மாநகர சபையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இலங்கையின் 66 ஆவது சுதந்திர தின வைபவம் இன்று காலை மாநகர சபை வளாகத்தில் நடைபெற்றது.     மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாநகர சபை உறுப்பினர்களான எம்.எஸ்.உமர் அலி, ஏ.எல்.எம்.முஸ்தபா, ஏ.எம்.றியாஸ் மற்றும் மாநகர முதல்வர் நிசாம் காரியப்பரின் செயலாளர் ரீ.எல்.எம்.பாரூக் ஆகியோர் உட்பட அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.     இதன்போது மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிசாம்…

Read More

ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தில் பறவைகளை விரட்ட புதிய திட்டம்

இலங்கையின் தெற்கே மத்தளை இல் அமைத்துள்ள மத்தளை ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தில் பறவைகளின் இடையுருகளால் விமானங்களை இயக்குவதில் அசௌகரியங்கள் இருந்து வருவது அறிந்ததே,   அண்மையில் மயில்கள் விமான என்ஜினை சேதப்படுத்திய சம்பவம் ஒன்றும் இடம்பெற்றிருந்தது.   இப்பிரச்சினைக்கு தீர்வாக விமான சேவைகள் அமைச்சு செயலாளரினால் (Ravindra Ruberu) இரண்டு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன , ராடர் கருவியின் முலம பறவைகளால் தங்கிக்கொள்ளமுடியாத ஒலி( high frequency sound) எழுப்பி அதன் மூலம் பறவைகளை விரட்ட  திட்டமிட்டுள்ளதாக…

Read More

மேர்வின் சில்வாவின் பழைய நினைவுகள்

சட்டவிரோதமாக துப்பாக்கிகளை தான் வைத்திருந்தாக அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். வெயாங்கொட பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.   அவர் மேலும் தெரிவிக்கையில்,   கோணவல சுனிலிடம் இருந்த பண்டாரநாயக்கவினரின் ஹொரகொல்ல வளவை நானே பாதுகாத்தேன்.   ஜே.ஆர். ஜயவர்தன, ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்திடம் இருந்து தற்காத்து கொள்ள நான் அன்று சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வைத்திருந்தேன்.   பண்டாரநாயக்கவினரின் ஹொரகொல்ல வளவிலும் ரொஸ்மிட் பிளேஸ் வீட்டிலும் எனக்கு…

Read More

கெலிஓயா கலுகமுவையில் முஸ்லிம்களால் கொண்டாடப்பட்ட சுதந்திர தின நிகழ்வு

  -எம்.எம்.எம். ரம்ஸீன்- கெலிஓயா கலுகமுவையில் இன்று காலை முஸ்லிம்களால் 04.02.2014 சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.     இதனை முன்னிட்டு கலுகமுவ பள்ளிவாசல் சந்தியில் நிகழ்வுகள் இடம்பெற்றன. இதில் பிரதம அதிதிகளாக கலந்து கொண்ட கலுகமுவ  மஸ்ஜிதுல் ஹுதா பள்ளிவாசல் தலைவர் ஐ.எல்.ஏ. மஜீத் கலுகமுவ மத்திய கல்லூரி அதிபர் சி.எம்.எஸ். மஹ்பூப் ஆகியோர் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.     இங்கு   தேசிய கொடி ஏற்றப்பட்டதுடன் விசேட உரைகளும் நிகழ்த்தப்பட்டு துஆ பிராhத்தனையும்…

Read More

இறந்துபோன முதலமைச்சருக்கு புதுவருட வாழ்த்து அனுப்பிய ஊவா முதலமைச்சர்!

வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் காலஞ்சென்ற பேர்டி பிரேமலால் திஸாநாயக்கவுக்கு ஊவா மாகாண முதலமைச்சரும் சபாநாயகரின் புதல்வரும் சஷிந்திர ராஜபக்ஷ புதுவருட வாழ்த்து அட்டையை அனுப்பியுள்ளார். மிகவும் விலையுயர்ந்த வாழ்த்து அட்டையை முதலமைச்சர் அனுப்பியிருந்தார். புதுவருட வாழ்த்து அட்டை கிடைத்ததை அடுத்து மிகவும் கோபமும் ஆத்திரமும் அடைந்த பேர்டி பிரேமலால் திஸாநாயக்கவின் மனைவி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலரிடம் இது பற்றி கூறியுள்ளார்.     இந்த விடயம் பற்றி அறிந்து கொண்ட ராஜபக்ஷ…

Read More

யாழில் இலங்கையின் தேசியக்கொடி விற்பனை மும்முரம்!

இலங்கையின் 66வது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு யாழ். மாவட்டமும் தாராகி வருகின்றதனைக் காணக்கூடியதாக உள்ளது. அதற்கான கடைகளில் இலங்கையின் தேசியக்கொடி விற்பனை செய்யப்படுவதுடன் அவற்றை வாங்குவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர் என தகவல்கள் தெரிவித்துள்ளன. இலங்கை அந்நியர் ஆட்சியின் கீழிலிருந்து விடுபட்டு நாளையுடன் 66 வருடங்கள் ஆகின்றது. அதன்படி இன்றைய சுதந்திரதினக் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.     அதற்கான கடைகளில் இலங்கைக்கொடி விற்பனை செய்யப்படுவதுடன் அவற்றை வாங்குவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.    …

Read More

மன்னார் முசலியில் நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டி

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தின் முசலி மஹா வித்தியாலயம் தேசிய கல்லுாரியாக தரமுயர்த்தப்பட்டதையடுத்து இடம் பெற்ற முதலாவது இல்ல விளையாடடுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் பரிசு வழங்குவதையும்,வடமாகாண சபை சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்,மன்னார் வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எம்.சியான்,அமைச்சரின் மாவட்ட இணைப்பாளர் எம்.முனவ்வர்,பாடசாலை அதிபர் அகுபர் ஆகியோரையும் படங்களில் காணலாம்.  

Read More

சுதந்திர தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேசத்தில் பல்வேறு நிகழ்வுகள்

-எஸ்.அஷ்ரப்கான்-   நாட்டின் 66வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேசத்தில் பல்வேறு நிகழ்வுகள் சமயஸ்தலங்கள், பாடசாலைகள், பிரதேச செயலகம் மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் போன்ற பல இடங்களில் விசேட வைபவங்கள் சமயக்கிரியைகள், தேசியக்கொடியேற்றும் நிகழ்வுகள் இன்று (04) செவ்வாய்கிழமை இடம்பெற்றது.   சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனீபா தலைமையில் பள்ளிவாசல் வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் நிர்வாகிகள், உலமாக்கள், பள்ளிவாசல் மரைக்காயர்கள், இளைஞர்கள் பிரதேசவாசிகளும் கலந்து…

Read More

கொழும்பு-14 அல் மத்ரசதுல் பிர்தொளஸ் தஜ்வீத் குர்ஆன் மத்ரசாவின் இஸ்லாமிய தின விழா

-ஏ.எஸ்.எம்.ஜாவித்- கொழும்பு-14 அல் மத்ரசதுல் பிர்தொளஸ் தஜ்வீத் குர்ஆன் மத்ரசாவின் இஸ்லாமிய தின விழா இன்று (4) பிற்பகல் 12.30 மணிக்கு மாளிகாவத்தை மன்ஸில் மண்டபத்தில் மத்ரசாவின் அதிபர் திருமதி கதீஜா தலைமையில் இடம்பெறவுள்ளது.   மேற்படி நிகழ்விற்கு அல்ஹாஜ் மௌலான எம்.எப்.எம். இல்யாஸ் கலந்து சிறப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Read More

பௌத்த மதத்தில் இருந்து ஏனைய மதங்களுக்கு மாற்றும் நோக்கில் 374 அமைப்புக்கள் இயங்குகின்றன-பொதுபல சேனா

  பௌத்த மதத்தில் இருந்து ஏனைய மதங்களுக்கு மாற்றும் நோக்கில் 374 அமைப்புக்கள் நிறுவன பதிவு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கொழும்பு மேல் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.   இந்த அமைப்புகளை முன்னெடுத்துச் செல்வதற்காக மாகாண பிரதி காவல்துறை மா அதிபர்களின் ஆலோசனைக்கு அமைய காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு வழங்குவதாகவும், அதற்கு அரசியல்வாதிகளின் அனுசரணை கிடைக்கப்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   கடந்த 2008ஆம் ஆண்டு ஜூலை…

Read More

அமைச்சர் றிசாத் பதியுதீன் ஆளுமைமிக்க தலைவர் – முதலமைச்சர் சீ.விக்னேஸ்வரன்

மன்னார்,வவுனியா,முல்லைத்தீவு மாவட்டங்களில் அண்மையக் காலமாக ஏற்பட்டுவரும் கத்தோலிக்க –முஸ்லிம்,சிங்கள-முஸ்லிம்,தமிழ்-சிங்களவர்களுக்கிடையலான பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முயற்சியினை அமைச்சர் றிசாத் பதியுதீன் எடுப்பாரெனில் அது சாத்தியமாகும்,ஏனெனில் உலகில் உள்ள முஸ்லிம் தலைவர்களில் 500 க்குள் ஒருவராக அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதிலிருந்து அவரது ஆளுமையினை புரிந்து கொள்ள முடியும் என வடமாகாண முதலமைச்சர் சீ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.   வவுனியா நகர மண்டபத்தில் நேற்று மாலை இடம் பெற்ற உள்ளுராட்சி மன்றங்களில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு…

Read More

காலணித்துவ சக்திகளின் அதிகார ஆணைகளில் இருந்து விடுபட்டு- எமது எதிர்காலத்தை நாம் தீர்மானிப்போம்- ஜனாதிபதியின சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

  66ஆவது சுதந்திரதின விழாவைக் கொண்டாடும் இன்றைய நாளில்- எமது மக்களின் சுதந்திரத்தையும் உரிமைகளையும் பாதுகாப்பதற்கான எமது அர்ப்பணத்தை மீள உறுதிப்படுத்தி- மீண்டும் மேலெழுந்துவரும் காலணித்துவ சக்திகளின் அதிகார ஆணைகளில் இருந்து விடுபட்டு- எமது எதிர்காலத்தை நாம் தீர்மானிப்போம்.     பிரிவினைவாதப் பயங்கரவாதிகளைத் தோற்கடித்ததன் மூலம் எமது சுதந்திரம் பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில்- நாம் முன்னேற்றத்தை நோக்கி எமது பயணத்தை விரைவுபடுத்தியுள்ளோம். இது துறைமுகங்கள்- விமானநிலையங்கள்- நெடுஞ்சாலைகள்- சக்தி- வலு போன்ற நவீன உட்கட்டமைப்புகளையும் கைத்தொழில்- வர்த்தகம்…

Read More

சுதந்திரத்தின் பின் சுதந்திரமற்ற சிறுபான்மை மக்கள்.

-ஏ.எஸ்.எம்.ஜாவித்-   அந்நியர் ஆட்சியில் இருந்து இலங்கை விடுபட்டு 66 வருடங்கள் கடந்தும் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் தீர்ந்தபாடில்லை மாறாக தற்போது பூதாகாரமாக தோற்றம் பெறுவது வருந்தத்தக்க விடயமாகும்.     அந்நியர் ஆட்சியின்போது இலங்கை, அவர்களின் காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுபட வேண்டும் என்ற இலங்கை வாழ் மக்களின் நீண்டகாலக் கனவு 1948ஆம் ஆண்டு பெப்ரவரி 4ஆம் திகதி நனவாக மாறியது.     இவ்வாறு சுயமாக நம்மை நாமே ஆளும் நிலைமைக்கு வித்திட்டவர்கள் அக்காலத்தில்…

Read More

சர்வதேச லயன்ஸ் கழகத்தின் அனுசரணையில் உயர்தரம் சித்தியடைந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஒருநாள் தலைமைத்துவ பயிற்சி

-எஸ்.அஷ்ரப்கான்- சர்வதேச லயன்ஸ் கழகத்தின் அனுசரணையோடு செக்றோ சிறிலங்கா நிறுவனத்தினால் உயர்தரம் சித்தியடைந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஒருநாள் தலைமைத்துவ பயிற்சி நெறி செக்றோ ஸ்ரீ லங்கா அமைப்பின் தலைவரும், சட்டத்தரணியுமான றினோஸ் கனீபா தலைமையில் சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் கடந்த ஞாயிறு இடம்பெற்றது.     இதன் ஆரம்ப நிகழ்விற்கு பிரதம அதிதியாக சர்வதேச லயன்ஸ் கழகத்தின் மாவட்ட ஆளுணர் லயன் லசந்த பெரேராவும், விசேட அதிதிகளாக மாவட்ட இணைப்பாளர் லயன் ரசிக்க எஸ். பிரியந்த, லயன்…

Read More

பெரிய நீலாவணை புலவர்மணி ஷரிபுத்தின் வித்தியாலயத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வு

-பி.எம்.எம்.ஏ.காதர்-   இலங்கையின் 66வது சுதந்திர தினத்தை யொட்டிய நிகழ்வு நேற்று பெரிய நீலாவணை புலவர்மணி ஷரிபுத்தின் வித்தியாலயத்தில் நடைபெற்றது.   அதிபர் எம்.எச்.குமாயூன், தலைமையில் நடை பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மருதமுனை அந்-நஹ்லா அறபுக் கல்லூரி அதிபர் ஏ.எல்.மீராமுகைதீன் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தினம் பற்றி விஷேட உரையாற்றினார்.     பிரதி அதிபர் எம்.ஏ.இனாமுல்லாஹ், மற்றும் ஆசிரியர்களும், மாணவர்களும் கலந்து கொண்டனர்.  

Read More

பாக்தாத்தில் ஷியா சன்னி முஸ்லிம் பிரிவினருக்கு இடையேயான கலவரம்: பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு

-பாக்தாத்- ஈராக் நாட்டில் கடந்த 2006-2008 ஆம் வருடங்களில் ஏற்பட்ட கொடூர இனக்கலவர யுத்தத்திற்குப் பின்னர் தற்போது மீண்டும் அங்கு முஸ்லிம் பிரிவுகளான ஷியா அரசுத் தரப்பினருக்கும், சன்னி முஸ்லிம் பிரிவினருக்கும் இடையேயான கலவரங்கள் வலுப்படத் தொடங்கியுள்ளன.   கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ஆம் தேதி அன்று ஈராக்கின் பிரதமர் நூரி-அல்-மாலிகி அன்பர் மாகாணத்தின் நாடாளுமன்ற உறுப்பினரும், சன்னி பிரிவு அரசியல்வாதியுமான அஹமது அல்-அல்வானியைக் கைது செய்ய முற்பட்டபோது ஏற்பட்ட தீவிரக் கலவரங்களில் அம்மாகாணத்தின் தலைநகர்…

Read More