
இலங்கைக்கு போர்க்கப்பல் விற்க தமிழக அரசு எதிர்ப்பு! – மத்திய அரசின் நிலைப்பாட்டை கோருகிறது நீதிமன்றம்.
மதுரை எட்டிமங்கலத்தை சேர்ந்த வக்கீல் பி.ஸ்டாலின், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், இலங்கை அரசுக்கு 2 போர் கப்பல்களை மத்திய அரசு விற்க திட்டமிட்டுள்ளது. இலங்கை அரசுக்கு போர் கப்பல்கள் விற்பனை செய்வது, தமிழக மக்கள் மத்தியில் நிலவும் இலங்கை அரசுக்கு எதிரான உணர்வுகளை அலட்சியப்படுத்துவதாகும். இலங்கையை இந்தியாவின் நட்பு நாடாக கருதக்கூடாது என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் 97 பேர், இலங்கை ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டு இலங்கை சிறையில்…