PTA கைதிகள் தொடர்பில் பொலிஸ்மா அதிபருக்கு காலக்கெடு விதித்த HRCSL! - Sri Lanka Muslim

PTA கைதிகள் தொடர்பில் பொலிஸ்மா அதிபருக்கு காலக்கெடு விதித்த HRCSL!

Contributors

PTA – பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பில், 48 மணி நேரத்திற்குள் குறிப்பிட்ட தகவல்களை வழங்குமாறு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

அதன்படி, கைது செய்யப்பட்ட இடம், தடுத்து வைக்கப்பட்ட இடம், கைது செய்யப்பட்ட நேரம்  மற்றும் கைதிகளை விடுவிப்பது அல்லது பிற தடுப்புக்காவல் இடங்களுக்கு மாற்றுவது குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு தெரிவிக்குமாறு HRCSL வினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team