கிண்ணியா மண்ணின் பெருமையை உலகுக்கு எடுத்துரைக்கும் மற்றுமோர் தருணம் - Sri Lanka Muslim

கிண்ணியா மண்ணின் பெருமையை உலகுக்கு எடுத்துரைக்கும் மற்றுமோர் தருணம்

Contributors
author image

Hasfar A Haleem

கிண்ணியா அல் அக்ஸா கல்லூரி தேசிய பாடசாலை மாணவன் கே.எம்.ஹாதிம் பார்சிலோனாவுக்கு செல்வதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார். உதைப் பந்தாட்டப் போட்டியில் 12 வயதுக்குட்பட்ட போட்டியில் பங்குபற்றவுள்ளார்.

அண்மையில் இலங்கை உதைப் பந்தாட்ட சம்மேளனமும் கல்வி அமைச்சும் இணைந்து நடாத்திய ரோட் டூ பேர்சிலோனா கிண்ணத்தை பல அணிகளை தோற்கடித்து இறுதிச் சுற்றில் கிண்ணியா அல் அக்ஸா அணி சம்பியனானது

கிண்ணியா மாஞ்சோலைச்சேனையை வசிப்பிடமாகக் கொண்ட இச் சுட்டி வீரனை அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றனர்.கிண்ணியா மக்கள், அல் அக்ஸா பாடசாலை சமூகம், கிண்ணியா பிரதேச செயலக ஊழியர்கள் உட்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.

இலங்கையிலில் இருந்து 3 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் தெரிவு செய்ய பட்டுள்ளமை குரிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் ஒரே சுட்டி வீரனாக ஹாதிம் விளங்குகிறார்.

FB_IMG_1534444733770-1

FB_IMG_1534445314903

Web Design by Srilanka Muslims Web Team