சவுதி அரேபிய நகரத்தில் தற்கொலைப்படை பயங்கரவாதி கைது - Sri Lanka Muslim

சவுதி அரேபிய நகரத்தில் தற்கொலைப்படை பயங்கரவாதி கைது

Contributors
author image

Editorial Team

சவுதி அரேபிய நகரம் அல்புக்கரியா. இந்த நகரத்தில் நேற்று முன்தினம் அதிகாலை 1.30 மணிக்கு சந்தேகத்துக்கு இடம் அளிக்கிற வகையில் ஒருவனை போலீஸ் அதிகாரிகள் கண்டனர். அவன் இடுப்பில் வெடிகுண்டுகள் பொருத்திய ‘பெல்ட்’ அணிந்து வந்த தற்கொலைப்படை பயங்கரவாதி என போலீஸ் அதிகாரிகள் சந்தேகித்தனர்.

அவனை அவர்கள் கைது செய்ய முயற்சித்தபோது, அவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு விட்டு அவன் தப்பினான். ஆனால் போலீஸ் அதிகாரிகள் விடாமல் துரத்தினர்.

அதைத் தொடர்ந்து அவன், அந்த நகர சந்தையில் காரில் இருப்பதை போலீஸ் அதிகாரிகள் கண்டனர். தன்னை போலீஸ் அதிகாரிகள் பார்த்து விட்டார்கள் என்பதை உணர்ந்ததும் அவன் மறுபடியும் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான். போலீஸ் அதிகாரிகளும் அவனை திருப்பிச்சுட்டனர். இதில் அவன் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தபோது, அவனை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அவன் உடனடியாக அங்கு உள்ள ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லப்பட்டான்.

அவன் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கொள்கைகளால் கவரப்பட்டவன் என்றும், அவனது பெயர் பவாஸ் அப்துல் ரகுமான் எனவும் தெரிய வந்து உள்ளது. அவனிடம் இருந்து ஒரு எந்திர துப்பாக்கி, 359 தோட்டாக்கள், ஒரு கைத்துப்பாக்கி ஆகியவை கைப்பற்றப்பட்டு உள்ளன.

இந்த சம்பவம், அந்த நகரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team