அடகு வைத்தோம் - Sri Lanka Muslim
Contributors
author image

நன்றி - அனுப்புனர்

 

Mohamed Nizous


ஆரோக்கியத்தை
அடகு வைத்தோம்
அர்த்த ராத்திரியில்
அன்றொய்ட் சிஸ்டத்திடம்

கை விரலை
அடகு வைத்தோம்
ஐ போணின்
அப்ஸ்களுக்குள்

பேச்சை
அடகு வைத்தோம்
பேஷ்புக்கிடமும்
பிற மீடியாக்களிடமும்

மூச்சை
அடகு வைத்தோம்
முன்னால் புகை விடும்
மூதேவியின் சிகரட்டில்

உண்மையை
அடகு வைத்தோம்
கடன் கேட்டு வரும்
கஷ்டவாளி காதுகளில்

நன்மையை
அடகு வைத்தோம்
சின்ன சின்ன உதவிகளையும்
ஷெல்பி போடும் சீரழிவில்

‘குடும்ப வாழ்க்கையை’
அடகு வைத்தோம்
கடுமையான வெப்பத்தில்
கட்டாரின் வீதிகளில்

நடு நிலையை
அடகு வைத்தோம்
கொடிய செயல் செய்தாலும்
கூட்டாளித் தனத்தில்

பெரு நாளை
அடகு வைத்தோம்
தெருவிலே செல்லும்
தேவையற்ற வேகத்தில்

வரும் நாளை
அடகு வைத்தோம்
நிகழ்காலம் தந்திருக்கும்
நேரத்தை வீணாக்கி

துணிச்சலை
அடகு வைத்தோம்
துணி வாங்கிய கலரில்
துணைவியின் திருப்தியில் ????

அணிவதை
அடகு வைத்தோம்
அடுத்தவர் சொல்லும்
அபிப்பிராயக் கதைகளில்

உணவை
அடகு வைத்தோம்
உடனடி உணவு என்ற
தாமதித்த நோய் கொண்ட பொதிகளில்

கனவை
அடகு வைத்தோம்
கல்வியை விற்கும்
காப்பரேட் சதிகளில்

ஆட்களை
அடகு வைத்தோம்
ஆடம்பர வாழ்க்கைக்காய்
ஆடி ஓடி உழைப்பதில்

வாழ்கையையே
அடகு வைத்தோம்
பொய்யான வாழ்க்கையின்
போலி சுகங்களில்

Web Design by Srilanka Muslims Web Team