தேசிய கபடி அணியில் முதல் முஸ்லிம் வீரர் - நேர்காணல் » Sri Lanka Muslim

தேசிய கபடி அணியில் முதல் முஸ்லிம் வீரர் – நேர்காணல்

received_1811677675583476

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

எம்மால்.என்.எம்.அப்ராஸ்தேசிய கபடி அணியில் இணைந்து இந்தோனசியாவில் இம்மாதம் ஆகஸ்ட் 18 தொடக்கம் செப்டம்பர் 02 வரை நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு நிகழ்வில் பங்குபற்றும் முதலாவது முஸ்லிம் வீரர் என்ற பெருமையை அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதியை சேர்ந்த அஸ்லம் சஜா பெற்றுள்ளார்.

நிந்தவூர் மதீனா விளையாட்டுக் கழகத்தின் வீரரான இவர் மிகச்சிறந்த கபடி கில்லியாக தனது திறமையை வெளிப்படுத்தியிருந்த வேளையிலேயே இந்த வாய்ப்பின் மூலம் தனது சொந்த ஊரான நிந்தவூரிற்கும் கிழக்குமாகாணதுக்கும் அம்பாறை மாவட்டதிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

மேலும் இவர் கடந்த 2016ம் ஆண்டு ஈரானில் இடம்பெற்ற ஆசிய கனிஷ்ட கபடி போட்டியில் இலங்கைஅணி சார்பாக பங்குபற்றி இலங்கைக்கு வெண்கலப்பதக்கம் பெற்றுக் கொடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்

இவ்வாறு பெருமைகளை தன்னகத்தை கொண்டுள்ள இவ்வீரரின் நவமணிக்கு வழங்கிய பேட்டி பின்வருமாறு:

கேள்வி: உங்களை பற்றி கூறுங்கள் ??

பதில்: எனது பெயர் அஸ்லம் சஜா. நான் நிந்தவூர் பிரதேசத்தை சேர்ந்தவன். எனது குடும்பத்தில் நான்கு பேர். அதில் நான் கடைசி. ஆரம்பம் தொடக்கம் இறுதி வரை கமுஃநிந்தவூர் அல் மதீனா மஹா வித்தியாலயத்தில் கல்வி கற்றேன்.

கேள்வி: நீங்கள் கபடி விளையாட்டை தெரிவு செய்ய காரணம் என்ன?
பதில்: பாடசாலை காலங்களில் எமது பாடசாலையிலுள்ள உயர் தரத்திலுள்ள மாணவர்கள் மைதானத்தில் விளையாட்டை விளையாடுவார்கள். அப்போது விளையாட வேண்டுமென்ற எண்ணம் தோன்றியது. அதை தொடர்ந்து விளையாட வேண்டுமென்று பல தடவைகள் சேர்ந்து விளையாடினேன். தெடர்ந்து அது எனக்கு பல வெற்றிகளை ஈட்டித்தந்தது.

கேள்வி: நீங்கள் கலந்து கொண்ட போட்டிகள் எவை? அதில் பெற்ற வெற்றிகளை பற்றி கூறுங்கள் ??
பதில்: பாடசாலை ரீதியாகவும்மாவட்ட தேசிய இளைஞர் மன்றம் ஊடாகவும் போட்டிகளில் கலந்து கொண்டு தேசிய மட்டம் வரை சென்றேன். பாடசாலை கோட்ட வலய மாவட்ட மட்டங்களில் பல சான்றிதழ்கள் கிடைத்தது. தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் மாவட்ட மட்டத்தில் நடாத்தப்பட்ட போட்டிகளில் தொடர்ந்து 10 வருடங்கள் கபடி அணிக்கு தலைமை தாங்கியுள்ளேன். அதன் பின் எனது நிந்தவூர் பிரதேசத்திலுள்ள எனது விளையாட்டுக்கழகமான மதீனா விளையாட்டுக் கழகத்தின் உறுப்பினரும் இராணுவ வீரர்களான என் இரு நண்பர்களான எம்.ரீ.எம்.சுபான் மற்றும் எம்.ஐ.இஸ்மாயில் ஆகியோரின் ஆலோசனைப்படி நாங்;கள் நிந்தவூரிலிருந்து 8 பேர் தெரிவுப்போட்டிக்கு ஒன்றிற்கு ஆசிரியரும் எனது நண்பருமான எஸ்.எம்..இஸ்மத் அவர்களின் தலைமையில் சென்றோம்.

முதலாவது தெரிவு கண்டியில் இடம்பெற்றது. அதில் நான் தெரிவாகினேன். பின்னர் அத்தெரிவு தடைசெய்யப்பட்டது. அதன் பின்னர் கொழும்பு டொரிங்டன் உள்ளக அரங்கில் இடம்பெற்ற தெரிவின் போது நான் தேசிய ரீதியில் 8வது நபராக தெரிவுசெய்யப்ட்டேன். பின்னர் 2016இல் ஈரான் நாட்டில் இடம்பெற்ற போட்டியில் கணிஷ்ட அணியில் விளையாடினேன். அதில் எங்களுக்கு மூன்றாம் இடம் கிடைத்தது.

2016இல் தேசிய மட்ட கடற்கரை போட்டிகளில் தங்கப்பகத்தையும் பெற்றேன் பின்னர் எனக்கு முப்படையின் அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அப்போது நான் இலங்கை கடற்படை அணிக்காக விளையாட வேண்டுமென உத்தேசித்தேன். பின்னர் கடற்படை அணிக்காக விளையாடினேன். அவ்வேளையில்தான் இலங்கை தேசிய கபடி அணிக்கான தேர்வு போட்டியொன்று இடம்பெற்றது. அதில் நான் தேசிய அணிக்கு தெரிவானேன். பின்னர் தற்போது 12 பேர் தரப்படுத்தலில் எனக்கு மூன்றாமிடம் கிடைத்தது. அத்துடன் தேசிய கபடி அணியின் முக்கிய 5 வீரர்களுள் நானும் உள்ளேன். மேலும் இக்கபடி அணிக்குச்சென்ற முதலாவது முஸ்லிம் என்ற பெருமை எனக்குண்டு.

கேள்வி: உங்கள் எதிர்கால இலட்சியம் என்ன?
பதில்: இந்தியாவில் நடைபெறும் கபடி விளையாட்டு போட்டியில் விளையாட வேண்டுமென்பதே எனது இலட்சியமாகும்.

கேள்வி: குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கபடி என்பது பிரசித்தம் அல்ல. ஆனாலும் நீங்கள் இளைஞர்,யுவதிகளுக்கு யாது கூற விரும்புகிறீர்கள்?
பதில்: நீங்கள் எத்துறையை தெரிவு செய்தாலும் அத்துறையில் இலக்கு இருக்க வேண்டும். கபடியை பொருத்த வரையில் விடா முயற்சி மற்றும் சிறந்த பயிற்சி மேற்கொண்டால் ஓர் சிறந்த இளைஞர்ää யுவதிகள் அணியை கிழக்கில் உருவாக்கலாம். இதன் மூலம் கிழக்கு மாகாணத்தை கபடி துறையில் முன்னேற்றலாம்.

கேள்வி: நீங்கள் யாருக்கு நன்றி கூற விரும்புகிறீர்கள்?
பதில்: முதலில் இறைவனுக்கும் எனது பெற்றோருக்கும் பாடசாலை அதிபர் வழிநடத்திய ஆசிரியர்கள் பயிற்றுவிப்பாளர்கள் ,மதீனா விளையாட்டு கழகத்தினர்நலன் விரும்பிகள்;எமது பிரதேச அரசியல்வாதிகளுக்கும் மற்றும் குறிப்பாக ஆரம்பம் தொடக்கம் இறுதி வரை எனக்கு பயிற்றுவித்த எஸ்.எம்.இஸ்மத் ஆசிரியர் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நவமணி
(24-08-2018)

received_1811677675583476

Web Design by The Design Lanka