ஓவரில் 1 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்த பாகிஸ்தான் வீரர்- முகமது இர்பான் டி20 வரலாற்றில் சாதனை » Sri Lanka Muslim

ஓவரில் 1 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்த பாகிஸ்தான் வீரர்- முகமது இர்பான் டி20 வரலாற்றில் சாதனை

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே 4 ஓவரில் ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சாதனைப் படைத்துள்ளார். #CPL2018

வெஸ்ட் இண்டீஸில் கரிபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் பார்படோஸ் டிரிடென்ட்ஸ் – செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த பார்படோஸ் டிரிடென்ட்ஸ் 147 ரன்கள் சேர்த்தது. பின்னர் செயின்ட் கிட்ஸ் அண்டு நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி பேட்டிங் செய்தது. அப்போது முதல் ஓவரை பாகிஸ்தான் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் முகமது இர்பான் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்திலேயே கிறிஸ் கெய்லை வீழ்த்தினார்.

அதன்பின் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். தொடர்ந்து நான்கு ஓவர்களையும் வீசினார். அவர் பந்தை செயின்ட் கிட்ஸ் அணி பேட்ஸ்மேன்களால் தொடக்கூட முடியவில்லை. 23 பந்தில் ரன்ஏதும் விட்டுக்கொடுக்கவில்லை.

இதனால் கடைசி பந்திலும் ரன் விட்டுக்கொடுக்காமல் சாதனைப் படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி பந்தில் ஒரு ரன் விட்டுக்கொடுத்தார். இதன்மூலம் நான்கு ஓவரில் 3 மெய்டனுடன் ஒரேயொரு ரன் மட்டும் விட்டுக்கொடுத்து (4-3-1-2) 2 விக்கெட் வீழ்த்தினார்.

இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் நான்கு ஓவர் ஸ்பெல்லில் ஒரேயொரு ரன் மட்டும் விட்டுக்கொடுத்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team