வைத்தியா் அசாத் எம் ஹனிபா எழுதிய ”தம்பியாா்” கவிதை தொகுதி வெளியீடு - Sri Lanka Muslim

வைத்தியா் அசாத் எம் ஹனிபா எழுதிய ”தம்பியாா்” கவிதை தொகுதி வெளியீடு

Contributors
author image

அஷ்ரப் ஏ சமத்

வைத்தியா் அசாத் எம் ஹனிபா எழுதிய மூன்றாவது கவிதை நுாலான ”தம்பியாா்” கவிதை தொகுதி வெளியீட்டு நிகழ்வு நேற்று(18) வெள்ளவத்தை தமிழ்ச்சங்கத்தில் காப்பியக்கோடொக்டா் ஜின்னாஹ் சரிபுத்தீன் தலைமையில நடைபெற்றது.

பிரதம அதிதியாக ஓய்வு நிலை பேராசிரியா் சபா ஜெயராசா கலந்து கொண்டாா். நுாலின் முதற்பிரதியை நுாலாசிரியா் கவிஞா் அசாத் எம். ஹனிபாவிடமிருந்து புரவலா் ஹாசீம் உமா் பெற்றுக் கொண்டாா்.

நவமணி ஆசிரியா் என்.எம். அமீன், சிரேஸ்ட ஊடகவியலாளா் கவிஞா் அஷ்ரப் சிகாப்தீன், கலைவாதி கலீல், அதிபா் அறிவிப்பாளா் ஏ.ஆர்.எம் ஜிப்ரி , சிரேஷ்ட ஊடகவியலாளா் செந்தில்வேலா் , வைத்திய ஞானம் ஞானசேகரன் ஆகியோறும் உரையாற்றினாா்கள். நுாலசிரியா் வைத்திய சேவையும், இலக்கிய சேவையும் பாராட்டி பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டார். இந் நிகழ்வில் இலக்கியவாதிகள் , வைத்தியா்கள் .கல்வியியலாளா்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனா்.

a2

a11 yyyy

yyyy1

Web Design by Srilanka Muslims Web Team