யாசிர் ஷாஹ் வீழ்த்திய பத்து விக்கட்டுகளும் டெஸ்ட் கிரிக்கட்டில் நிகழ்த்தப்பட்ட மோசமான உலக சாதனைகளும் » Sri Lanka Muslim

யாசிர் ஷாஹ் வீழ்த்திய பத்து விக்கட்டுகளும் டெஸ்ட் கிரிக்கட்டில் நிகழ்த்தப்பட்ட மோசமான உலக சாதனைகளும்

Contributors
author image

A.M.Sulfikar - Akkaraipattu

பாகிஸ்தான் – நியூசிலாந்து இடையே நடந்து வரும் டெஸ்ட் தொடரின் இரண்டாம் போட்டியில் நியூசிலாந்து அணி 90 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

முதல் இன்னிங்க்ஸில் பாகிஸ்தான் அணி 418 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய நியூசிலாந்து மிக சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது.
பாகிஸ்தான் அணியின் யாசிர் ஷா இந்த போட்டியில் ஒரே நாளில் 10 விக்கெட்கள் வீழ்த்தி சாதனை புரிந்துள்ளார்.

பாகிஸ்தான் 418 ரன்கள்
பாகிஸ்தான் முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங்கில் அசார் அலி 81, ஹாரிஸ் சொஹைல் 147, பாபர் ஆசாம் 127 ரன்கள் எடுக்க, 418 ரன்கள் குவித்து 5 விக்கெட்கள் இழந்து இருந்த போது டிக்ளர் செய்தது. அடுத்து பேட்டிங் செய்ய வந்தது நியூசிலாந்து.

90 ரன்களுக்கு ஆல்-அவுட்
நியூசிலாந்து அணிக்கு ஜீத் ராவல், டாம் லாதம் சிறப்பான துவக்கம் அளித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் குவித்த போது ஜீத் ராவல், யாசிர் ஷா பந்தில் ஆட்டமிழந்தார். 50 ரன்கள் வரை விக்கெட் இழக்காமல் இருந்த நியூசிலாந்து அணி 90 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தது.

யாசிர் ஷா 8 விக்கெட்கள்
யாசிர் ஷா ஜீத் ராவல் தொடங்கி வரிசையாக 8 விக்கெட்கள் அள்ளினார். இடையே ஹசன் அலி ஒரு விக்கெட் எடுத்தார். யாசிர் ஷா ஒரு ரன் அவுட்டும் செய்தார். நியூசிலாந்து அணியில் ஆறு வீரர்கள் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். கேன் வில்லியம்சன் மட்டுமே 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஒரு வீரர் கூட அவருக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இதன் மூலம், ஒரே இன்னிங்க்ஸில் 8 விக்கெட் வீழ்த்தி சாதனை செய்தார் யாசிர் ஷா. அவர் சாதனை அத்துடன் முடிந்துவிடவில்லை.

ஒரே நாளில் 10 விக்கெட்கள்
நியூசிலாந்து அணிக்கு ஃபாலோ-ஆன் கொடுத்தது பாகிஸ்தான். யாசிர் ஷா இரண்டாம் இன்னிங்க்ஸில் முதல் 2 விக்கெட்களை வீழ்த்தினார். இதையடுத்து ஒரே நாளில் 10 விக்கெட்கள் வீழ்த்திய சாதனையும் செய்தார் யாசிர் ஷா.
நியூசி. நிலைமை என்ன?
நியூசிலாந்து அணி தற்போது மூன்றாம் நாள் முடிவில் 131 ரன்கள் எடுத்து இரண்டு விக்கெட் இழந்து களத்தில் இருக்கிறது. பாகிஸ்தான் அணி 197 ரன்கள் முன்னிலையில் உள்ளது. நியூசிலாந்து வெற்றி பெற மிக குறைந்த வாய்ப்பே உள்ளது. எனினும், ஒரே நாளில் அதிக விக்கெட்கள் விழுந்து வருவதால் முதல் டெஸ்ட் போட்டி போல கடைசி நேரத்தில் நிலைமை மாறினாலும் மாறலாம்.

சோதனை பட்டியல்
இதன் இடையே முதல் இன்னிங்க்ஸில் 90 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆன நியூசிலாந்து அணி பல மோசமான சாதனைகளை செய்தது. 50 ரன்களுக்கு மேல் விக்கெட் இழக்காமல் ஆடிய பின் மிக குறைந்த ஸ்கோர் எடுத்த பட்டியலில் இந்த 90 ரன்கள் இன்னிங்க்ஸ் முதல் இடம் பிடித்துள்ளது.

ரெண்டுமே நாங்க தான்
இந்த பட்டியலில், இரண்டாம் இடத்திலும் நியூசிலாந்து அணியே உள்ளது. இதற்கு முன்பு இலங்கை அணிக்கு எதிராக 58 ரன்கள் வரை விக்கெட் இழக்காமல் இருந்து பின் 102 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி இருந்தது. தன் மோசமான சாதனையை இப்போது தானே முறியடித்துள்ளது நியூசிலாந்து அணி.

6 டக்-அவுட் சாதனை
கடைசி 8 பேட்ஸ்மேன்கள் வெறும் 5 ரன்கள் மட்டுமே அடித்து இருந்தனர். இதற்கு முன்பு இலங்கை அணியில் கடைசி 8 வீரர்கள் 8 ரன்கள் அடித்து இருந்த பரிதாப சாதனையை முறியடித்துள்ளது நியூசிலாந்து. டெஸ்ட் போட்டியின் ஒரே இன்னிங்க்ஸில் 6 வீரர்கள் டக்-அவுட் ஆவது இது வரை 4 முறை நடந்துள்ளது. நியூசிலாந்து ஐந்தாவது அணியாக அந்த பட்டியலில் சேர்ந்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team