“விழிகள் தேடும் விடியல்” கவிதை நூல் வெளியீட்டு விழா - Sri Lanka Muslim

“விழிகள் தேடும் விடியல்” கவிதை நூல் வெளியீட்டு விழா

Contributors
author image

P.M.M.A.காதர்

தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழி பீட மாணவர் பேரவையின் வெளியீட்டில் தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவி புத்தளம் கவிச்சாரல் சாரா எழுதிய ‘விழிகள் தேடும் விடியல்’ கவிதை நூல் வெளியீட்டு விழா நாளை(18-12-2018)1.30 மணிக்கு தென்கிழக்குப் பல்கலைக்கழக எப்.ஐ.ஏ.கேட்போர் அரங்கில் நடைபெறவுள்ளது.

இதில் பிரதம விருந்தினராக தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழி பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எஸ்.எம்.எம்.மஸாஹிர் கலந்து கொள்கின்றார்.சிறப்பு விருந்தினராக இஸ்லாமிய கற்கை நெறி துறைத் தலைவர் கலாநிதி எம்.ஐ.எம்.ஜெஸீல் கலந்த கொள்கின்றார்.

கௌரவ விருந்தினர்களாக பேராசிரியர் எம்.ஏ.எம் றமீஸ் அப்துல்லா,கலாநிதி ஏ.ஆர்.நஸார்,சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி பிர்தௌஸ் சத்தார்,சிரேஸ்ட விரிவுரையாளர் எம்.எச்.ஏ.முனாஸ்,சிரேஸ்ட விரிவுரையாளர் எப்.எச்.ஏ.ஷிப்லி, மாணவர் உதவிச் சேவை மற்றும் நலன்புரிப்பிரிவின் பணிப்பாளர் கலாநிதி ஏ.ஆர். சர்ஜீன்,கவிஞர் அனார் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

2

Web Design by Srilanka Muslims Web Team