கல்வித் தீ ...!!! » Sri Lanka Muslim

கல்வித் தீ …!!!

edu

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Mohamed Nizous


எண்பதுகளின் நடுவில்
இக்கட்டில் மாட்டிய
முஸ்லிம் சமூகம்
முற்றாக நசுங்க
கிழக்கின் ஊர்களில்
கிளர்ந்து எழுந்தது
கற்க வேண்டுமென்ற
கடுமையான முயற்சி.

அவர்கள் இரக்கமின்றி
அடிக்க அடிக்க
அப்பாவி உயிர்களைக்
குடிக்கக் குடிக்க
அனுபவித்ததை சூறையாடி
முடிக்க முடிக்க
அப்போது முடிவு கொண்டார்
படிக்கப் படிக்க

எங்கெங்கோ படித்தவர்
எல்லோரும் ஊர் வந்தார்
இங்குள்ள பாடசாலையில்
எழுந்தது பெரும் போட்டி.
பொங்கிய வியாபாரம்
புதைவதைக் கண்ட பெற்றோர்
தங்களின் பிள்ளைகளைத்
தரமாகப் படிக்க வைத்தார்

ஊருக்கு உள்ளேயே
உருவாகின டியூசன்கள்.
யாருக்கும் வெளிச் செல்ல
இயலாத நிலைமை.
வேர்பிடிக்கத் தொடங்கி
விருட்சமானது கல்வி
யாரும் வியக்க இன்று
எழுந்து நிற்கிறது.

கிழக்கில் எழுந்த தீ
கிடுகிடுவெனப் பரந்தது.
மற்றைய இடங்களிலும்
மாற்றங்கள் தோன்றின.
இன்று முஸ்லிம்கள்
ஏதோ ஓரளவு
கல்விப் பாதையிலே
காட்டுகிறார் அக்கறை.

மூன்றாவது இனம்
மூன்றுக்குள் வருகிறது
பத்து சதவீதம்
பத்துக்குள் வருகிறது.
மருத்துவம் பொறியியல்
மாணவர் செல்கிறார்.
இருந்த நிலைகளிலும்
இது பெரும் முன்னேற்றம்.

ஆனாலும் அவலம்
ஆங்காங்கே இருக்கிறது.
மாணவிகள் கற்றாலும்
மாணவர்கள் விழுகின்றார்.
வீணாகிப் போன சிலர்
வேண்டாம் கல்வி என்று
ஆனைக் கூத்துக்குள்
பூனைக் கூத்து போடுகிறார்.

இன்னும் வெகு தூரம்
இது செல்ல வேண்டும்
விண்ணைத் தொடும் வரை
வியாபிக்க வேண்டும்
நன் நபியின் வழியிலே
நன்றாக அறிவு கொண்டு
கண்ணியமாய் வாழும்
கற்ற சமூகம் என்று
அந்நியர் பார்த்து
ஆச்சரியப் பட வேண்டும்

Web Design by The Design Lanka