''தெறித்தெழும் எண்ணங்கள்" கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு » Sri Lanka Muslim

”தெறித்தெழும் எண்ணங்கள்” கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு

44446

Contributors
author image

அஷ்ரப் ஏ சமத்

ஓட்டமாவடி அசனாா் அயுப்ஹானின் இரண்டாவது கவிதை நுாலான ” தெறித்தெழும் எண்ணங்கள்” கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் காப்பியக்கோ வைத்தியா் ஜின்னாஹ் சரிபுத்தீன் தலைமையில் நடைபெற்றது.

நுாலின் முதற்பிரதியை நுாலசிரியரிடமிருந்து புரவலா் ஹாசீம் உமா் பெற்றுக் கொண்டாா். நுால் பற்றிய உரையை சட்டத்தரணி மர்சூர் மௌலானா நிகழ்த்தினாா். கருத்துரையை கவிஞா் அஷ்ரப் சிகாப்தீன் நிகழ்த்தினாா்.

மற்றும் ஆசிரியா் ஜாமல்தீன், ஏ.ஆர்.எம் பர்வின், ஆகியோரும் உரை நிகழ்த்தினாா்கள். பாடகா் கலைக் கமலின் வாழ்த்தும் பாட்டும் இஸ்லாமிய மற்றும் சுவந்தராஜனின் பாடல்களையும் பாடினாா்.

அத்துடன் பானந்துறையைச் சோ்ந்த மாணவிகளது நடன நிகழ்வும் இடம் பெற்றது. அத்துடன் ஓட்டமாவடி இலக்கிய வட்டம் நுாலசிரியரை பொன்னாடை போற்றி கௌரவித்தனா்.

443 444 4442 4444a 44446

Web Design by The Design Lanka